Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Trisha vijay


தமிழ் சினிமாவின் “எவர்கிரீன்” ஜோடியான விஜய் மற்றும் திரிஷா குறித்து கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட வதந்திகள் றெக்கை கட்டிப் பறந்தன. இந்தச் சூழலில், ஜூன் 22 அன்று தளபதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டுமொத்த திரையுலகமும் கோலாகலமாகக் கொண்டாடியது.

ஆனால், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்தபோதும், ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையும் நடிகை திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மீதே இருந்தது. காரணம், ஒவ்வொரு வருடமும் விஜய்க்கு முதலாளாக நள்ளிரவில் வாழ்த்து சொல்லும் திரிஷா, அன்று இரவு வரை மௌனம் காத்தார்.

இணையத்தில் வெடித்த விவாதம்:
முந்தைய ஆண்டுகளைப் போல இல்லாமல் திரிஷா அமைதியாக இருந்தது, ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “இருவருக்கும் இடையே நிஜமாகவே கருத்து வேறுபாடா?” என்ற ரீதியில் சோசியல் மீடியாவில் விவாதங்கள் காட்டுத்தீயாய் பரவி, பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தன.

ஒரே ஒரு போஸ்ட்… மொத்த வதந்தியும் காலி!
ஆனால், வதந்திகளை வெறும் வதந்திகளாகவே சுருட்டி எறிந்து, ஜூன் 23 அன்று ஒரு மெகா ட்விஸ்ட் கொடுத்தார் திரிஷா. விஜய்யின் பிறந்தநாளுக்கு மறுநாள், யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் இணைந்து மிக நெருக்கமாக கேக் வெட்டிக் கொண்டாடும் லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, நெட்டிசன்களின் வாயடைக்கச் செய்தார்.

இதையும் படியுங்க  தடையை உடைத்த தாரகை! மேடையில் கணவருக்காக உருகிய ஸ்ருதி ரங்கராஜ்! இணையத்தை கலக்கும் எமோஷனல் ஸ்பீச்!

“தாமதமான வாழ்த்து என்றாலும், தரமான வாழ்த்து” என ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பகிர்ந்த சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து சாதனை படைத்து வருகிறது. திரிஷா வாழ்த்துச் சொல்ல ஏன் ஒரு நாள் தாமதித்தார் என்ற கேள்வி இன்னும் நீடித்தாலும், அவர் பகிர்ந்த இந்த ஒற்றைப் புகைப்படம் வதந்திகளுக்குச் சாட்டையடி கொடுத்துள்ளது. தாங்கள் எப்போதுமே தமிழ் சினிமாவின் “மாஸ் காம்போ” தான் என்பதை இந்த ஜோடி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago