Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்திற்கு “தர்மன்” என்று அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. “ஓ மை கடவுளே” மற்றும் “டிராகன்” திரைப்படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.

முன்னதாக சுந்தர் சி மற்றும் சிபி சக்ரவர்த்தி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்குநராக உறுதிசெய்யப்பட்டுள்ளார்.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் “தர்மமே வெல்லும்!” என்ற டேக்லைனும், “The Deadly Doctor” என்ற வாசகமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தலைப்பு அறிவிப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், “நான் பொதுவாக மேடைகளில் பேசினாலே பிரச்னை தான். பேசாமல் இருந்தாலும் பிரச்னை தான். அதனால் இப்போது மிகவும் ஜாக்கிரதையாகப் பேச வேண்டியுள்ளது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்க  தமிழ் திரையுலகை அழிக்கும் தெலுங்கு பிரதர்ஸ்..! அஜித்துக்கே இந்த நிலைமையா..? கழுத்தை நெறிக்கும் சிக்கல்..!

மேலும், “நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது” என்றும் தனது பாணியில் பஞ்ச் வசனம் பேசி ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், “40 ஆண்டுகளுக்கு முன்பே நானும் ரஜினியும் இணைந்து எடுத்த ஒரு முக்கியமான முடிவுதான் இந்த தயாரிப்பு கூட்டணிக்குக் காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் மீண்டும் இணையும் இந்த கூட்டணி, தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 months ago at 4 months ago