”எடுக்கிற முடிவுகள் ஒவ்வொன்றையும் அப்போது கூட்டணி தலைமை என்கிற முறையில் அண்ணன் ஸ்டாலின் அவர்களிடத்திலே கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அவரை சந்தித்தும், பேசி இருக்கிறோம். அதைத்தான் நான் சொன்னேன். அந்த உறவு தொடர்கிறது. அந்த நட்பு தொடர்கிறது. அவருடைய கவனத்திற்கு சென்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அதன் பிறகுதான் ஆதரவு நல்கினோம் என்கிற வகையில் ஆமாம் இன்னும் திமுக கூட்டணில் தான் தொடர்கிறோம் என்று பதில் சொன்னோம்” என்றார் திருமா.
தன் மனதில் தோன்றும் கருத்தை யாருக்கும் அஞ்சாமல் அழுத்திச் சொல்லக்கூடிய தைரியமும், துணிச்சலும் கொண்ட அரசியல் தலைவர்களில் விசிக தலைவர் திருவாவளவன் முக்கியமானவர். அப்படி அவர் சொன்ன கருத்தை அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அவரே மறுத்து பேசக்கூடிய வல்லமை அவரது சிறப்பம்சமாக மாறியிருக்கிறது.

”பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள் ”நீங்க திமுக கூட்டணியில் தான் இருக்கீங்களா இல்லையான்னு? திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இல்லை என்று திமுக தலைமையே அறிவித்துவிட்டது. தேர்தலுக்கு முன்பு சிறுத்தைகளுடன் இரவு நேரத்தில் முகநூலில் உரையாடிய போது தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையும் என்றும் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்து தெரிவித்திருந்தார் திருமா.
சீனாவுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா! 40 ஈபிள் டவர் இரும்புடன் உருவான ₹80,000 கோடி மெகா ஆலை!
119 இடங்களில் வெற்றி பெற்றால் தான் ஒருவர் சபாநாயகர் ஆட்சி அமைப்பதற்கு அதிக பெருமான்மை என்கிற அடிப்படையை பார்த்தால் 118 ஆக 119 பேர் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அவர்கள் ஆளும் கட்சியாக அமர முடியும் இல்லையேல் அது தொங்கு சட்டமன்றமாக மாறும். அப்போது கூட்டணி ஆட்சி என்கிற ஒரு கருத்து மேலோங்கும். இதனை மனதில் வைத்துதான் எம்பி பதவியை ராஜிராமா செய்துவிட்டு திருமா காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றதும் மறுநாளே தான் போட்டியிடவில்லை என்றும் தங்கள் கட்சியிலேயே இல்லாத ஒருவரை காட்டுமன்னார் கோவில் வேட்பாளராகவும் அறிவித்து ட்விஸ்ட் கொடுத்தார். தொங்கு சட்டசபை அமையும் என்று தான் சொல்லவே இல்லை என்றும் தான் இரவில் தெரிவித்த கருத்தை மறுத்தார் திருமா.

ஒரு அங்கு அசெம்பிளி வரும், தொங்கு சட்டசபை வரும் அப்படின்னு சந்தேகப்பட்டு நான் போட்டியிடுவதாக சொல்லப்படுகிற கருத்து தவறான கருத்து. என்னுடைய நோக்கத்தை கொச்சைப்படுத்துகிற காரணத்தினால் நான் முன்வைத்த காலை பின்வைக்கவில்லை இதை ஒரு உத்தியாக பார்க்கிறேன். என் நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன். என் உத்தியை மாற்றி அமைக்கிறேன். தேர்தல் முடிந்து தொங்கு சட்டசபை அமைந்ததும் இதனை முன்னமே கணித்தது நான்தான் என்று பெருமைப்பட்டு கொண்ட திருமா தன்னை போட்டியிட விடாமல் தடுத்து கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“ஒத்த செங்கல் வரலாறு முடிந்தது! 90% வேலை ஓவர்.. ஆகஸ்ட்டில் அதிரடியாக திறக்கப்படும் மதுரை எய்ம்ஸ்!”
ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கணித்தபடி தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தவெக ஆட்சி அமைக்க விசிக்கு ஆதரவு கொடுக்குமா? கொடுக்காதா? என்பதை அறிவிக்கவே அவருக்கு ஐந்து நாட்கள் அவகாசம் தேவைப்பட்டது. இறுதியில் தவெகவுக்கு ஆதரவு கடிதத்தை கொடுத்து அனுப்பினார். தவெக அமைச்சர் அவையில் இடம் பெறுவோம். ஆனால், திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று விசித்திரமான நிலைப்பாட்டையும் அறிவித்தார்.
”விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று ஆதவ் அர்ஜுனா வெளிப்படையான அழைப்பை முன்வைத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் தவெக தலைமையிலான இந்த அமைச்சர் அவையில் இடம்பெற வேண்டும் என்கிற வெளிப்படையான அழைப்பை அடுத்து எமது கட்சியின் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்தாய்வு செய்தோம்” என்றார் திருமா.
விசிகவின் வன்னிய அரசு அமைச்சர் அவையில் இடம் பெற்றதும் ஆவேசமான திமுகவின் ராசா கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த போதும் பதிலுக்கு விமர்சிக்காமல் பாயிண்ட் வரட்டும் என்று சாப்ட்டாக காத்திருந்தார் திருமா. ஆனால் தன்னால்தான் தவெக ஆட்சி அமைந்தது என்றும் தான் ஒரு கிங் மேக்கர் என்றும் தனக்குத்தானே புகழாரம் சூட்டிக்கொண்டார். ”நான் டெல்லிக்கு போய் இறங்கினாலும் இந்தி பேசக்கூடியவன் என்னை பார்த்த உடனே வாங்க கிங் மேக்கர்னு அழைக்கிறான். அது யாருன்னே தெரியல”” என்றார் திருமா.
கிங் மேக்கர் அப்படின்னா அரசனை உருவாக்கக்கூடியவர். ஆட்சியாளரை உருவாக்கக்கூடியவர். இதற்கிடையே கடந்த ஒன்றாம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் கையை உயர்த்தி பிடித்து உற்சாகம் தெரிவித்தார் திருமா. ஏழாம் தேதி கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த திருமா தவெக அமைச்சரவையில் விசிக பங்கெடுத்தாலும் தவெக கூட்டணியில் விசிக இல்லை என்றும் இன்னும் திமுகவுடன் நட்புடன் இருப்பதாக தெரிவித்து அடுத்த ட்விஸ்டை கொடுத்தார் திருமா.
”அமைச்சரவில் இடம் பெற்றாலும் கூட நாங்கள் தவெக கூட்டணியில் இணைந்து விட்டோம் என்று சொல்வதற்கு அதிகாரபூர்வமான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எடுக்கிற முடிவுகள் ஒவ்வொன்றையும் அப்போது கூட்டணி தலைமை என்கிற முறையில் அண்ணன் ஸ்டாலின் அவர்களிடத்திலே கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம். அவரை சந்தித்தும் பேசியிருக்கிறோம். அதைத்தான் நான் சொன்னேன். அந்த உறவு தொடர்கிறது. அந்த நட்பு தொடர்கிறது.
அவருடைய கவனத்திற்கு சென்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அதன் பிறகுதான் ஆதரவு நல்கினோம் என்கிற வகையில் ஆமாம் இன்னும் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம் என்று பதில் சொன்னோம்” என்றார் திருமா.

ஒரே குழப்பமாக உள்ளதே என்று கேட்ட செய்தியாளர்களிடம் ”தலைவர் பேசியதற்கு எல்லாம் உரை எழுத முடியாது” என்று கூறிச் சென்றார் அமைச்சர் வன்னி அரசு. ”விருதுகள் வழங்க மிக தெளிவாக உரையாற்றி இருக்கிறார்கள் உரையாற்றி இருந்தார்கள். தலைவருடைய உரைக்கு நான் கோனார்” என்றார் வன்னி அரசு. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி எழுதிய உரையை சமூக வலைத்தளங்களில் தனது விளக்கமாக பகிர்ந்தார் திருமாவளவன். அதில் ”திமுகவுடன் நட்புடன் இருந்தோம்” என்று கூறினாரே தவிர நட்புடன் இருப்பதாக கூறவில்லை என்று பாயிண்ட்டை பிடித்து ட்விஸ்ட் வைக்கப்பட்டது.
உரசும் விசிக.. நெருங்கும் பாமக..! தவெக-வும் வேணும்… திமுக-வும் வேணும்.. திருமாவின் டபுள் கேம்..!
இப்போதைக்கு சிறுத்தைகளின் கேள்வி ஒன்றுதான். தவெக கூட்டணி ஆட்சியில் அமைச்சராக அங்கம் வகிக்கிறோம் சரி, யாருடன் கூட்டணியில் இருக்கிறோம் என்பதுதான். கவலை வேண்டாம். அதற்கு ஒரு ட்விஸ்டை வைப்பார் நம்ம திருமா.

[…] […]