https://republictn.com/

தமிழக அரசியலில் நிலவி வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்து, த.வெ.க ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. வி.சி.க, த.வெ.க-வுக்கு தனது நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலமான 118 இடங்களை தற்போது த.வெ.க. எட்டியுள்ளது. வி.சி.க.வின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் த.வெ.க-வுக்குத் தங்கள் ஆதரவை வழங்கியதன் மூலம் இந்த மேஜிக் நம்பரை அக்கட்சி தொட்டுள்ளது. முன்னதாக, த.வெ.க. ஆட்சியமைக்கச் சில இடங்கள் குறைவாக இருந்த நிலையில், வி.சி.க.வின் இந்த திடீர் ஆதரவு அறிவிப்பு அக்கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளது.

த.வெ.க.வின் இந்த அரசியல் பயணத்தில் பல்வேறு முக்கிய கட்சிகள் ஏற்கனவே தங்களது ஆதரவை உறுதி செய்துள்ளன. காங்கிரஸ்: 5, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: 2, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: 2 இடங்கள்
என கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன், த.வெ.க. இப்போது பலமான நிலையில் உள்ளது. குறிப்பாக, வி.சி.க.வின் ஆதரவு எந்தவித நிபந்தனையும் இன்றி வழங்கப்பட்டுள்ளது. திருமா துணை முதல்வர் பதவி, ஒரு அமைச்சர் பதவி கேட்பதாக கூறி வந்த நிலையில் நிபந்தனையற்ற ஆதரவு எனக்குறிப்பிட்டுள்ளது பலரும் கூறி வந்த கருத்துக்களை பொய்யாக்கி உள்ளது.

ஆளுநர் மாளிகையிலிருந்து அடுத்தகட்ட அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago