Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Modi

மோடி தலைமையிலான மத்திய பாஜாக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அந்த அதிரடி நடவடிக்கை இந்தியாவின் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் கண்ணீரை துடைக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.

புற்றுநோய் மருந்துகளின் மீதான 90% வரையிலான அதிரடி விலைக்குறைப்புதான் அந்த அறிவிப்பு. இது வெறும் சாதாரண சலுகை அல்ல. அது லட்சக்கணக்கான ஏழை எளிய சாமானிய மனித உயிர்களை காப்பதற்கான மாபெரும் ஒரு பாதுகாப்பு அருணாகும். நரேந்திர மோதி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு சாதாரண மக்களின் அன்றான துயரங்களையும் வழிகளையும் மிக ஆழமாக உணர்ந்து பெரு நிறுவனங்களின் அதீத லாப வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பதை இந்த அதிரடி உத்தரவு மிக தெளிவாக நிரூபிக்கிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் இத்தகைய துணிச்சலான மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் தரமான மருத்துவ வசதிகள் மிக குறைந்த செலவில் கிடைக்க வேண்டும் என்கின்ற உன்னதமான நோக்கத்தை வெளிப்படுத்துவதோடு இக்கட்டான சூழலில் தவிக்கும் குடும்பங்களுக்கு புதியதொரு நம்பிக்கையையும் பெரு மகிழ்ச்சியையும் வாரி வழங்கி இருக்கிறது.

இதையும் படியுங்க  வறுமை ஒழிப்பில் இந்தியா உலக சாதனை..! ஏழை -பணக்காரர் இடைவெளி குறைந்ததா..?
Republic Tamil

புற்றுநோய் என்ற கொடிய நோய் தாக்கியவுடன் உடல் வலியோடு சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பத்தின் பொருளாதாரமும் சிதைந்து போகும் சூழல் இந்தியாவில் பல காலமாக நீடித்து வந்தது. அறுவை சிகிச்சை, கீமோதெரப்பி என பல லட்சம் ரூபாய் செலவழித்து அதன் பின்னரும் ஆயிரக்கணக்கில் விற்கும் மருந்துகளை வாங்க முடியாமல், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்கள் திண்டாடி வந்தன. புற்றுநோய் மருந்துகளின் மூலம் பெரும் லாபம் ஈட்டுவதை கடுமையான பகல் கொள்ளை என்று உற்ற நீதிமன்றமே சாடி இருந்த நிலையில் பிரதமர் மோதியின் அரசு மக்கள் நலனை மட்டுமே முதன்மையாக கொண்டு இந்த அதிரடி முடிவை எடுத்திருக்கிறது.

புற்றுநோய் மருந்துகளின் சில்லறை விலையில் 30%த்திற்கு மேல் லாபம் பெறக்கூடாது என்று வரம்பு விதித்ததன் மூலம் மருந்துச் சந்தையில் நிலவி வந்த அநியாய விலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணயம் 543 புற்றுநோய் மருந்துகளின் சில்லறை விலையை 90% வரை அதிரடியாக குறைத்து புதிய விலை பட்டியலை வெளியிட்டடிருக்கிறது. குறிப்பாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் மார்பக புற்றுநோய்க்கான பல்பூஸ்லி கிளிப் மருந்து 40 ஆயிரத்தில் இருந்து 2720 ஆகவும், 695ஆக இருந்த அனார்சோல் மருந்து வெறும் 73ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  "பிரதமரை திட்டிய பெண்.. அழுதுகொண்டே கேட்ட மன்னிப்பு! மோடி செய்த நெகிழ்ச்சியான காரியம்!"

இரத்த புற்று நோய்க்கான மருந்து ₹20,812லிருந்து வெறும் ₹85ஆக குறைக்கப்பட்டிருப்பது, சாமானிய மக்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும். முன்பெல்லாம் எங்கோ ஒரு சிலருக்கு மட்டுமே வந்த புற்றுநோய் தற்போதைய வாழ்வியல் சூழலில் மிக வேகமாக பெருகி வருகிறது. இந்த சூழலில் நோயின் வேதனையை விட பொருளாதார சுமையால் வாடும் மக்களுக்கு நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விலை குறைப்பு ஒரு சஞ்சீவினி மூலிகையாக அமைந்துள்ளது.

மருந்துகளின் விலை எட்டாக்கனியாக இருந்ததால் தங்களின் ஆயுட்காலத்தை இழந்த ஏழைகளுக்கு இந்த விலை குறைப்பு உரிய நேரத்தில் மருந்து உட்கொண்டு உயிர்வாழும் நம்பிக்கையை அளித்திருக்கிறது.நா நாட்டின் விளிம்பு நிலை மக்களின் மருத்துவ தேவையை உணர்ந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், பிரதமர் மோதி எடுத்திருக்கும் இந்த மக்கள் நல நடவடிக்கை, இந்திய மருத்துவ துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதில் மாற்று கருத்து இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 hours ago at 6 hours ago