Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

K.N.Nehru

சோசியல் மீடியாவை திறந்தாலே நடிகை ஜனனி அசோக் குமார் டாபிக் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சீரியலில் நடித்து பிரபலமானதை விட அதிக அளவில் உற்று நோக்கப்படும் நபராக மாறி இருக்கிறார் ஜனனி அசோக் குமார்.

அதற்கு காரணமே கே. என் நேரு மீதான வழக்கில் ஜனனி அசோக் குமார் பெயரும் கிசுகிசுக்கப்படுவதுதான். திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்ததுறை அமைச்சராக இருந்த கே. நேரு வேலை வாங்கி தருவதாக 634 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ஜேஇஏஇ மாதிரியான பணியிடங்களுக்கு ஒவ்வொரு நபரிடமிருந்தும் 25 லட்ச ரூபாய் வரை வாங்கிக்கொண்டு தகுதியற்ற நபர்களுக்கு பணியாணை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியிருக்கிறது. இந்த சோதனைகளில் 170 ஆவனங்கள் 13 மின்னணு சாதனங்கள் பரிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. கமிஷனாக பெறப்பட்ட பணம் சென்னை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாக கூறிய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஹவாலா மூலம் வெளிநாடுகளுக்கும் பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

இதையும் படியுங்க  திரையுலகில் பெருஞ்சோகம்: அடையாறு ஆற்றில் குதித்து பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
K. N. Nehru

மேலும் கமிஷன் பணத்தில் துணிக்கடைகள், ஸ்வீட் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து அதன் மூலம் பெருமளவில் வருமானம் ஈட்டப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் தான் தற்போது சின்னத்திரை நடிகைகளின் பெயர்களும் அடிபடுவதால் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியது.

அதாவது சின்னத்திரை நடிகைகளின் வங்கி கணக்குகள் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வெளியான தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. கே. என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மூலமாக நடிகைகளின் வங்கி கணக்குகளுக்கு கமிஷன் அடிப்படையில் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக சின்னத்திறை நடிகை ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட சில நடிகைகளின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது எனவும் பின்னர் அந்த வங்கி கணக்குகளில் இருந்து வேறு கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் ஆனது எனவும் தகவல் பரவி வந்தது.

கே.என்.நேரு தொடர்பான 634 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட நடிகைகளை விசாரணை வளயத்துக்குள் கொண்டுவர இருப்பதாக தகவல் கசிந்தது. இந்த நிலையில்தான் நடிகை ஜனனி அசோக் குமாரிடம் இருந்து நீண்ட விளக்க அறிக்கை வெளியாகி உள்ளது. 634 கோடி ரூபாய் முறைகேடு வழக்கிற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறியுள்ள நடிகை ஜனனி அசோக் குமார் எந்த ஒரு அரசியல் கட்சியுடனோ அரசியல்வாதிகளுடனோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்க  "அறிவாலயத்தை உலுக்கும் அக்னிப் பரீட்சை: அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி இறுதித் தீர்ப்பு!"
Janani Ashok Kumar

எந்த பின்புலமும் இல்லாமல் சின்னத்திறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பதாக கூறியுள்ள ஜனனி பொய்யாக புனையப்பட்ட கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லி தனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக வேதனையை பகிர்ந்துள்ளார். மேலும் சோசியல் மீடியாவில் பரவும் பொய்யான தகவலை மக்களும் உண்மை என நம்பி கொண்டிருக்கிறார்கள் என்ற ஜனனி அசோக் குமார், செய்தியை வெளியிடும் முன்பு அது உண்மையா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என வலியுறுத்தியுள்ளார்.

தனக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட வழக்கிற்கும் தொடர்பு என பொய்யான தகவலை வெளியிட்டவர்கள் திருத்திக் கொள்ளுங்கள் என்ற ஜனனி அசோக்மார் ஒரு குற்றச்சாட்டையே உறுதிப்படுத்திய உண்மை போல திரித்து பரப்பாதீர்கள் என பொங்கி எழுந்துள்ளார். ஒரு பக்கம் நடிகையை சம்பந்தப்படுத்தி அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வர இன்னொரு பக்கம் தனக்கும் முன்னாள் அமைச்சருக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் வந்திருக்கிறது.

ஆகையால் யார் சொல்வது உண்மை? வங்கி பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டால் மேலும் யார் யாருடைய பெயர்கள் வெளிவரும்? என்பதெல்லாம் அடுத்தடுத்த விசாரணையில் தான் தெரியவரும்.

இதையும் படியுங்க  "கே.என்.நேரு ரூ.634 கோடி ஊழல் புகாரில் என் பெயரா? கொந்தளித்த சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்!"

நெருப்பில்லாமல் புகையுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 hours ago at 9 hours ago