Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Pattinapakkam!

புனித ஜார்ஜ் கோட்டை! 385 வருஷம் தாண்டியும் அதே கம்பீரம்… அதே அதிகார வாசனை! இந்தச் சுவர்களுக்குள்ளே எத்தனை ஆட்சிகள் வந்து போயிருக்கின்றன… எத்தனை கனவுகள் புதைந்து கிடக்கின்றன!

ஒவ்வொரு ஆட்சி வந்தாலும் ஒரு கனவு வரும்… ‘புதிய தலைமைச் செயலகம்!’

கருணாநிதி ஆசை ஆசையாய் கட்டியதை, காழ்ப்புணர்ச்சியில் ஜெயலலிதா ஆஸ்பத்திரியாக்கிய கதை தமிழ்நாட்டுக்குத் தெரியும். இப்போது அதே கனவு… இன்னும் பெரிசா, இன்னும் சர்ச்சையா திரும்ப வந்திருக்கு. இந்த முறை ஸ்பாட்… பட்டினம்பாக்கம்!

முதல்வர் வீட்டுக்குப் பின்னால் செயலகம்!

ஆகஸ்ட் 2026. சட்டசபையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு… “20 லட்சம் சதுரடியில், 1,200 கோடியில் பிரமாண்ட சட்டசபை – தலைமைச் செயலக வளாகம்!”

அடுத்த சில நாள்களில் ஜி.ஓ! இடம் பிக்ஸ்… பட்டினம்பாக்கம் கடற்கரையை ஒட்டிய 17 ஏக்கர்! சாட்டிலைட் படத்தில் மஞ்சள் கோடு போட்டு காட்டப்பட்ட அதே இடம். அதில் ஒரு பிட்… 3.82 ஏக்கரில் இருக்கும் வீட்டு வசதி வாரியத்தின் 96 குடியிருப்புகள்!

அதிகாரிகள் சிலாகிச்சாங்க… “கடல் காத்து வீச, அலை சத்தம் கேட்க ஆட்சி செய்யலாம். முதல்வர் வீட்டிலிருந்து நடந்தே போயிடலாம்!”

இதையும் படியுங்க  அய்யோ போச்சே... திமுகவால் நடுத் தெருவில் காங்கிரஸ்..! கதறும் தொண்டர்கள்… கொதிக்கும் ராகுல்!

ஆனால், தலைமைச் செயலகத்துக்குள்ளேயே ஒரு முணுமுணுப்பு… “கிழக்கு பார்த்து கட்ட வாஸ்து இடிக்குது!” சேப்பாக்கம் எழிலகம் பின்னால் கட்டலாம்னு வந்த யோசனையை தூக்கி குப்பையில் போட்டாச்சு. காரணம் என்ன தெரியுமா… ‘முதல்வர் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கணும்!’

இதுதான் முதல் நெருடல்! இது மக்களுக்கான தலைமைச் செயலகமா… இல்லை முதல்வர் வீட்டின் ‘பின்பக்க எக்ஸ்டென்ஷனா?’

“புலிகேசி ஆட்சி கொந்தளித்த மீனவ கிராமங்கள்!

பட்டினம்பாக்கத்தைச் சுத்தியிருக்கிற 12 மீனவ கிராமங்கள் “இது புலிகேசி “ஆட்சியென கொதிச்சுப் போயிடுச்சு!

“வலை காயப்போடுற மணல் போயிடும்… கடலுக்குப் போற வழி அடைபடும்… எங்க வயித்துல அடிச்சுட்டு தலமைச் செயலகமா?”ன்னு போராட்டம் வெடிச்சது.

அக்டோபர் 14, 2026… அரசு ஒரு அடி பின்னே வச்சது. “மீனவப் பிரதிநிதிகள்கிட்ட பேசுவோம்”னு முதல்வர் உத்தரவு. “ஆயுதபூஜை லீவுக்குப் பிறகு கலெக்டர் தலைமையில் பேச்சு… அதுக்குப் பிறகுதான் DPR”னு அறிவிப்பு. மீனவர்கள் நம்பினாங்க…

அக்டோபர் 19, 2026… அடுத்த வெடிச்சது புதிய சர்ச்சை பட்டினம்பாக்கம் கைவிடப்பட்டது… பல்லவன் இல்லத்தில் புதிய செயலகம்!”னு ஒரு தகவல் கசிஞ்சது. 13.22 ஏக்கர் பல்லவன் இல்லம்… எம்.டி.சி-க்கு 7.55 ஏக்கர், SETC-க்கு 3.957 ஏக்கர், பல்லவன் இல்லத்துக்கு 1.701 ஏக்கர்! “பஸ், ரயில், மெட்ரோ… அரசு நிலம்… எதிர்ப்பு வராது”னு அதிகாரிகள் கணக்குப் போட்டதா பேச்சு. மீனவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டாங்க. “கதை முடிஞ்சது”னு நினைச்சாங்க.

இதையும் படியுங்க  "சார் உங்க சைன் வேணும்!" அதிகாரி கேட்டதும் யோசிக்காமல் பேனாவை எடுத்த முதல்வர் விஜய்! கரூரில் வைரலாகும் 'மாஸ்' சிம்பிளிசிட்டி!

ஆனால், அதிகாரத்தின் கதை அவ்வளவு சீக்கிரம் முடியுமா என்ன?

இன்று காலை வந்த ட்விஸ்ட்!

நவம்பர் 02, 2026… இன்று காலை! தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒரு டெண்டர் அறிவிப்பை வெளியிடுது… “புதிய தலைமைச் செயலகம் அமையும் இடத்தில் உள்ள சேதமடைந்த 96 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க டெண்டர்!”

3.82 ஏக்கர்… 96 குடியிருப்புகள்… இடிக்க டெண்டர்! அப்படின்னா… பட்டினம்பாக்கம் கைவிடப்படலை! பல்லவன் இல்லம் என்பது வெறும் திசைதிருப்பல் நாடகமா? மீனவர்களை அமைதிப்படுத்தச் சொன்ன பேச்சுவார்த்தை வெறும் கண்துடைப்பா?

பாருங்க குழப்பத்தை… ஜி.ஓ சொல்லுது பட்டினம்பாக்கம்! அக்டோபர் 19 தகவல் சொல்லுது பல்லவன் இல்லம்! நவம்பர் 02 டெண்டர் சொல்லுது மீண்டும் பட்டினம்பாக்கம்! ஒரே அரசு… மூணு நிலைப்பாடு!

1. அவசரத்தின் பின்னணி: 1,200 கோடி… 20 லட்சம் சதுரடி… இது வெறும் கட்டடம் இல்லை பாஸ்… ஆட்சியின் ‘அடையாளச் சின்னம்’! தன் ஆட்சிக்காலத்தில் வரலாற்றில் நிக்கணும்ங்கிற அரசியல் அவசரம். அதுவும் முதல்வர் வீட்டுக்குப் பின்னாலேயே கட்டினா… நிர்வாகமும் கண்காணிப்பும் ‘வீட்டிலிருந்தே’ நடக்கும்! இது நிர்வாக வசதியா… அதிகாரக் குவிப்பா?

இதையும் படியுங்க  திமுக-வை கைகழுவும் ஓ.பி.எஸ்..! தவெக-வில் இணையும் தர்ம யுத்தம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

2. மீனவனின் கண்ணீர்: பேச்சுவார்த்தை அறிவிப்போட நின்னுடுச்சு. DPR வரவேயில்லை. ஆனால், இடிக்க டெண்டர் மட்டும் வந்துடுச்சு! “எங்களைக் கேட்காம எங்க மண்ணுல கட்டடமா?”னு கேட்கிறாங்க மீனவப் பிரதிநிதிகள். கடலை நம்பி வாழ்றவங்களோட வாழ்விட உரிமை, CRZ விதிகள், பாரம்பரிய அணுகல்… எதுவுமே கணக்குல எடுக்கலையா?

3. இடிப்பின் அரசியல்: காகிதத்தில் “சேதமடைந்த குடியிருப்புகள்”னு எழுதுறது ஈஸி. ஆனால், அது பல அரசு ஊழியர் குடும்பங்களின் நினைவுகள் தங்கிய இடம்! அதை இடிச்சுத் தள்ளிட்டு, கடற்காற்று வீசும் கண்ணாடி மாளிகை எழும்பும். இது வளர்ச்சியா… வீட்டுக்குப் பின்னால் அதிகாரத்தைக் குவிக்கும் துஷ்பிரயோகமா?

ஆரம்பம் முதல் டெண்டர் வரை… இது வெறும் கட்டடக் கதை இல்லை. கடலை நம்பி வாழும் ஏழை மீனவனின் கண்ணீரும், கோட்டை கனவு காணும் அதிகாரத்தின் அகங்காரமும் மோதும் கதை!

பார்ப்போம்… இந்த டெண்டரால் இடிக்கப்படுவது வெறும் கட்டடமா… இல்லை மீனவர்களின் நம்பிக்கையா… இல்லை ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மையானு.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 hours ago at 9 hours ago