Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Modi

இந்தியாவில கடந்த 12 ஆண்டுகள்ல் சுமார் 49.6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டிருக்கிறதா உலக வங்கியோட அறிக்கை தெரிவிச்சிருக்கு. தீவிர வறுமையில் வாழுற மக்களோட விகிதம் 27.1%த்தல இருந்து 2.6% மாக சரிஞ்சிருக்கு. வறுமை ஒழிப்புல இந்தியா அடைஞ்சிருக்கிற இந்த முன்னேற்றம் எப்படி சாத்தியமாச்சு? அரசோட நலத்ததிட்டங்கள் எந்த அளவுக்கு பங்களிச்சிருக்கு? பொருளாதார வளர்ச்சி சாதாரண மக்களோட வாழ்க்கையில என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கு? அதே நேரத்தில ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி குறைஞ்சிருக்கா?

உலக வங்கியோட 2026 அக்டோபர் அறிக்கையின் படி 2011 2023 வரையிலான காலகட்டத்தில இந்தியாவோட வறுமை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைஞ்சிருக்கு. நாள்ஒன்றுக்கு 300க்கும் குறைவான வருவாயில் வாழ்ந்த மக்களோட விகிதம் 2011ல 27.1%மாக இருந்துச்சு. ஆனா 2023ல் அது 2.6%மாக குறைஞ்சிருக்கு. இதோட அடிப்படையில சுமார் 49.6 6 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டிருக்கிறதா உலக வங்கி மதிப்பிட்டுருக்கு. அதே மாதிரி குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கான வறுமை அளவுகோளான நாள் ஒன்றுக்கு 420 அப்படிங்கிற வரம்புக்கு கீழ வாழறவங்களோட விகிதம் 57.7%த்தில் இருந்து 16.1%மாக குறைஞ்சிருக்கு.

இதையும் படியுங்க  40 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் அதிசயம்..! இன்னும் 6 இடங்கள் மட்டுமே… வரலாறு படைக்கப் போகும் மோடி

இந்த புள்ளி விவரங்கள் இந்தியாவோட வறுமை நிலவரத்தில் ஏற்பட்டிருக்க மாற்றத்தோட அளவை உணர்த்துது. இந்தியாவில வறுமை குறைஞ்சதற்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே காரணம் கிடையாது. அரசோட பல்வேறு சமூக நல திட்டங்களும் இதுல முக்கிய பங்களிப்பு செஞ்சிருக்கு. குறிப்பா பிரதமரோட இலவச உணவு தானிய திட்டம், பொது வினியோக திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம், நேரடி மானிய பரிமாற்றம், வங்கி கணக்குகள் மூலமா நிதி உதவி, வீட்டு வசதி திட்டங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் மாதிரியான நலத்ததிட்டங்கள் ஏழை குடும்பங்களோட வாழ்க்கையில மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கு.

Republic Tamil

இந்தியாவில வறுமை குறைஞ்சிருக்கிறது தேசிய அளவிலான மாற்றம். ஆனால் எல்லா மாநிலங்களலையும் வறுமை ஒரே அளவில குறைஞ்சிடல. உலக வங்கியோட அறிக்கையின் படி இந்தியாவில வறுமையில் உள்ளவங்கள்ல சுமார் 57%த்தினர் உத்தர பிரதேசம் முதல் மேற்கு வங்கம் வரையிலான மாநிலங்களில் உள்ளனர். இது மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதார வளர்ச்சி வேறுபாடுகளையும் வெளிப்படுத்துது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில்துறை முதலீடு விவசாய வளர்ச்சி ஆகியவற்றில் பின்தங்கிய மாநிலங்களில் வறுமையை ஒழிக்கிறது இன்னும் பெரிய சவாலாக இருக்கும்.

இதையும் படியுங்க  அமமுக கூண்டோடு கலைப்பா..? சிக்கலில் டிடிவி தினகரன்..! பாஜக வைத்த 'செக்'..!

இந்தியாவோடு வறுமை குறைஞ்சிருக்கிற அதே நேரத்தில் வருமான ஏற்ற தாழ்வு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கு. உலக சமத்துவமின்மை ஆய்வகம் என்கிற ஆராய்ச்சி அமைப்போட வேர்ல்ட் இன்ஈக்வாலிட்டி ரிப்போர்ட் 2026 அறிக்கையும் இந்தியாவோட வருமானம் மற்றும் சொத்து பகிர்வில் இருக்கிற ஏற்ற தாழ்வுகளை வெளிப்படுத்துது. அந்த அறிக்கையோட மதிப்பீட்டின்படி 2024ஆம் ஆண்டில் இந்தியாவோட மொத்த வருமானத்தில சுமார் 58% முதல் 10%த்தனருக்கு தான் சென்றிருக்கிறது. அதே நேரத்தில் மக்கள் தொகையில் கீழ்மட்டத்தில் இருக்கிற 50%த்தனருக்கு கிடைச்ச வருமான பங்கு சுமார் 15% மட்டும்தான். சொத்து பகிர்வுல இந்த வேறுபாடு இன்னும் அதிகமாகி இருக்கு.

நாட்டோட மொத்த சொத்துக்களில் சுமார் 65% முதல் 10% த்தனர் கிட்ட குறைஞ்சிருக்கிறதா அந்த ஆய்வு மதிப்பிடுது. மேல்மட்டத்தில் இருக்கிற ஒரு சதவீதத்தினர் கிட்ட மட்டும் சுமார் 40% சொத்துக்கள் இருக்கு. அதாவது ஒரு பக்கம் வறுமை குறைஞ்சிட்டு வந்தாலும் இன்னொரு பக்கம் நாட்டோட செல்வத்தில் பெரும்பகுதி குறிப்பிட்ட சிறிய பிரிவினர் கிட்ட குவிஞ்சிருக்கு. இது இந்தியாவோட பொருளாதார வளர்ச்சியில் இருக்கிற முக்கியமான முரண்பாடா பார்க்கப்படுது. வறுமை கோட்டுக்கு மேல போனவங்க எல்லாரும் பொருளாதார பாதுகாப்பு பெறல. ஏழை பணக்காரர் இடைவெளி அதிகரிச்சுகிட்டேதான் இருக்கு. இளைஞர்களோட வேலைவாய்ப்பும் ஊதிய வளர்ச்சியும் கவனிக்கப்பட வேண்டியவையா மாறி இருக்கு.

இதையும் படியுங்க  இரத்த சோகையை குறைத்து, ஹீமோகுளோபினை இயற்கையாக அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

அதனால வறுமையிலிருந்து மக்களை மீட்கிறது முதல் வெற்றி மட்டும்தான். அவங்களை மீண்டும் வறுமைக்குள்ள தள்ளப்படாத அளவுக்கு பொருளாதார பாதுகாப்பு உருவாக்குறதுதான் நிலையான வெற்றி. நாட்டோட வளர்ச்சி பலன்கள் பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரைக்கும் எல்லாரையும் சென்றடைய செய்றதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago