”தலித் ஐபிஎஸ்-களுக்கு உயர் பதவி கிடைக்க நான் காரணமா? நான் யாரையும் பரிந்துரை செய்யவில்லை. சாதி புத்தியால் விமர்சிக்கின்றனர் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ஒருவர் என்னை முதல்வர் என்றார். இன்னொருவர் துணை முதல்வர் என்றார். இப்போது சிலர் நோபல் பரிசுக்கு என்னை பரிந்துரை செய்கிறார்கள். இன்றைக்கு 59 இடங்கள் திமுக வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதுவும் விடுதலை சிறுத்தைகளின் பங்களிப்புதான் மகத்தானது என்பதை சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

“நோபல் பரிசு” கிண்டல்… திருமா-விடம் மொத்தமாக சரண்டர்.. 24 மணி நேரத்தில் பல்டி அடித்த வைகோ.. !
அதை கூட அந்த அளவுக்கான எண்ணிக்கையை தக்க வைத்ததில் சிறுத்தைகளின் பங்கு மகத்தானது. அதை யாரும் சொல்ல மாட்டாங்க. ஏன் சொல்ல மாட்டாங்கன்னா விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைக்கிற முக்கியத்துவம் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாம யாரும் சொல்லல. அவங்களா வந்து என் பேரை முன் மொழிந்தார்கள். ஒருத்தர் துணை முதலமைச்சர் என்றார். ஒருத்தர் முதலமைச்சர் என்றார். நாங்க சொல்லவே இல்லை. நாங்க கிளைம் பண்ணவில்லை. நாங்கள் யாரிடமும் போய் கேட்கவில்லை. என்னிடம் இருப்பது ரெண்டு சீட்டு. நாங்கள் யாரிடமாவது போய் கேட்டோமா? எங்களை முதலமைச்சர் ஆக்குங்கன்னு நாங்க யாரிடமாவது போய் கேட்டோமா? எங்களுக்கு துணை முதலமைச்சர் வேணும்னு? இப்ப நம்ம கேட்கவே இல்லை.

நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கிறார்கள். இன்னும் என்னென்ன கிடைக்குமோனு நமக்கு தெரியல. நான் பாட்டுக்கு சிவனேன்னு இங்க உட்காந்துருக்கறேன். உங்கள கூடவே கிடந்து உங்க மூச்சு காற்றை சுவாசிச்சிட்டு கிடக்கறேன். 20 மணி நேரம்
ஒரு நாளைக்கு கும்பலில் கிடந்து உழல்கிறேன். ஆனால் எங்கேயோ இருக்கிறவர்கள், துணை முதலமைச்சர் என்கிறார்கள். முதலமைச்சர் என்கிறார்கள். இப்போது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கிறார்கள். அதற்கு நான் என்ன பண்ண முடியும்? அது சிலருக்கு வயிற்று எரிச்சலா இருக்கு. இந்த வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல் மீடியாவில அவன் இவன்னு கூட பேசுறாங்க.
ஏதோ நான் சொல்லிதான் டிஜிபி போட்டாங்க. நான் சொல்லிதான் தவெகவுக்கு தலைவரை போட்டாங்க. நான் சொல்லிதான் லா அண்ட் ஆர்டர் போட்டாங்க என்பது போல தவறான தகவல் சொல்கிறார்கள். யாருக்கும் நான் சொல்லவில்லை. நான் சொல்லியும் போடவில்லை. அது உண்மையும் இல்லை. அந்த அதிகாரி தலித் என்றால் நான் சொன்னேன்னு அர்த்தமா? நான் தலித்துக்கு மட்டும் தான் சொல்லுவேனா? வேற யாருக்கும் நான் சொன்னது இல்லையா? 25 வருஷத்துக்கு முன்னாடி ஆனந்த விகடனில் ஒரு பேட்டி. ”எனக்கு முதலமைச்சர் கனவு உண்டு அப்படி என ஒரு பேட்டி எடுத்து போட்டார்கள்.
இது நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிற ஒரு செய்தி. நான் எல்லாருக்கும் சொல்றது என்னன்னா மக்களா பார்த்து திருமாவளவனுக்கு இந்த தகுதி இருக்கிறது என்று தீர்மானிக்கிற காலம் வரும். அதுவரையில் உழைப்பது மட்டும்தான் என் வேலை. பாடுபடுவது மட்டும்தான் என் வேலை. நானே என்ன வந்து ஒரு பிராண்ட் பண்ணிக்க மாட்டேன். ஆள பிடிச்சு எனக்கு ஏதாவது இந்த பிராண்டிங் ஸ்ட்ரேட்டஜி கொடுங்க… எனக்கு எப்படி பிரச்சாரம் பண்ணனும் எப்படி பேசணும்னு எனக்கு ஏதாவது எழுதி கொடுங்க. அப்படில்லாம் எல்லாம் கேட்க மாட்டேன்.
இப்ப சும்மா அப்படியே தூக்க கலக்கத்துல உட்கார்ந்து எழுந்து டக்குனு எழுந்து வந்து பேசுறேன். என்ன பேசுறதுனு எனக்கு தெரியாது. அவங்க பேசுனத வச்சு பேசுறேன். பிரிப்பேர் பண்ணிட்டு நான் வரல. ஆக விடுதலை சிறுத்தைகள் கட்சி குறி வைக்கப்படுவது, திருமாவளவன் குறி வைக்கப்படுவது ஒரு உள்நோக்கம் கொண்ட செயல். தமிழக அரசியலில் இவர்கள் தொடர்ந்து பேச பேசுபடு பொருளாக இருக்கிறார்கள் அல்லது தீர்மானிக்கிற சக்தியாக இருக்கிறார்கள்” என தெரிவித்தார்.

[…] திமுக 59 இடங்களில் வெற்றி பெற நான்தான்… […]