Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

மக்களை சந்திப்பதற்காக நாளை கரூர் செல்லும் முதலமைச்சர் விஜய் தான்தோன்றிமலை வழியாக ரோடு ஷோ செல்ல திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இதனை அடுத்து மாநகர பகுதியில் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நாளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கரூர் வருகிறார். கரூர்ல மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கிறது. முதலாவதாக கரூரில் 5000 பேரைச் சந்திக்கிறார். முதலமைச்சரை சந்திக்கும் இந்த மக்கள் நிகழ்ச்சியில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு மேற்குரையின் கீழ் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு வருபவர் அனைவருக்குமே பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

திமுக 59 இடங்களில் வெற்றி பெற நான்தான் காரணம்..! சாதி புத்தியால் குறி வைக்கிறார்கள்..! திருமா புலம்பல்..!

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இந்த பாஸ் வழங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மாலை மூன்று மணிக்கு மேல் அரசு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில கிட்டத்தட்ட ஒரு 32 குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்க இருக்கிறார். தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அவர் இந்த அரசு நிகழ்ச்சிக்கு வரும்போது ரோட் ஷோ மூலமாகத்தான் வந்தடைவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க  "ஊழல்வாதிகள் கட்சியில் இருந்தால்... எப்படி லஞ்சமில்லாத ஆட்சி வரும்?" - முதல்வர் விஜய்க்கு சகாயம் IAS எழுப்பிய நேரடி கேள்வி!

“52 வழக்குகள்… ஜெயிலருக்கே ஸ்கெட்ச்… சொகுசு ஓட்டலில் துப்பாக்கி முனையில் வீழ்ந்த வடசென்னை தாதா!”

அதற்காக ஏறத்தாழ 15,000-க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கரூரில் குவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இந்த அரசு நிகழ்ச்சியை பொறுத்தவரை இரண்டு நிகழ்ச்சிகளாக திட்டமிடப்பட்டிருக்கிறது. ஒன்று பணி நியமன ஆணை வழங்குவது. இரண்டாவது தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார். அதாவது 13,500 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் ஏறத்தாழ 1500 கோடி மதிப்பீட்டில் தோல் அல்லாத காலனி தயாரிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

“தவெக ஆட்சியைக் கலைக்க சிங்கப்பூரில் ஸ்கெட்ச் போட்ட தொழிலதிபர்..! திடீர் ட்விஸ்ட்.. பறந்தது அவசர ‘லுக் அவுட் நோட்டீஸ்..’!”

நாளை சரியாக 11:30 மணிக்கு கரூர் வந்தடைவார் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கரூர் வந்தடைவார் என்றும் கூறப்படுகிறது. சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கரூருக்கு வந்து இங்க மக்களை சந்தித்த பிறகு மதியத்திற்கு மேல் அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழாலும் பங்கெடுக்கிறார். அதற்காக முதலமைச்சர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க  திமுக தனித்துப் போட்டி… வெற்றியா? தோல்வியா? வரலாறு என்ன சொல்கிறது?
Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago