Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Anbil Mahesh

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஒரு புதுத் தத்துவம் தி.மு.க-வில் உதயமாகியிருக்கிறது. லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்தவன் புனிதன்… வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டவன் மட்டும் குற்றவாளி!

இதை நாம் சொல்லவில்லை. தருமபுரி தி.மு.க எம்.பி ஆ.மணியின் செயல்பாடே சொல்கிறது என்று கொந்தளித்துக் குமுறுகிறார்கள் உடன்பிறப்புகள்.

நூறு கோடி… ஒரு வாக்குமூலம்!

விவகாரத்தின் பின்னணி இதுதான்… பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ₹100 கோடி லஞ்ச வழக்கில் சிக்கி இன்று சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவருக்கு லஞ்சம் கொடுத்ததாகப் போட்டுக் கொடுத்தவர் தருமபுரி தொழிலதிபர்  DNC இளங்கோவன்.

சட்டம் என்ன சொல்கிறது? லஞ்சம் கொடுத்தவனும் குற்றவாளிதான். ஆனால், காவல்துறையின் அணுகுமுறை என்ன? கொடுத்தவரைப் பூப்போலத் தாங்கி ‘சாட்சி’ என்ற பெயரில் சோபாவில் உட்கார வைத்துவிட்டு, வாங்கியதாகச் சொல்லப்பட்டவரை மட்டும் உள்ளே தள்ளியிருக்கிறது.

“டேய்… ரெண்டு பேருக்கும் ஒரே சட்டம்தானேடா?” இது தருமபுரி தி.மு.க-காரன் எழுப்பும் நியாயமான கேள்வி.

இதையும் படியுங்க  "ஜேம்ஸ் பாண்ட் ரேஞ்சுக்கு யோசிச்சீங்களேடா..!" வதந்தி பரப்புவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? - அமைச்சர் பர்வேஸ் நெத்தியடி!

ரிப்பன் வெட்டிய எம்.பி! ,

இந்த லட்சணத்தில், லஞ்சம் தான் கொடுத்ததாக வாக்குமூலம் சொன்ன இளங்கோவனின் புதிய பெட்ரோல் பங்க்கைத் திறந்து வைக்க திமுக எம்.பி-யே கத்தரிக்கோலோடு போய் நிற்கிறார். உடன் நகரச் செயலாளர் நாட்டார் மாது. இருவரும் சேர்ந்து ஆளுந்தரப்புக்கு ஏதோ சமிக்ஞை கொடுப்பதுபோல கேமராவுக்குப் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

அடடே… என்னவொரு கட்சிப் பாசம்! , கட்சிக்காரரை உள்ளே தள்ளக் காரணமானவருக்குப் பாராட்டு விழாவா? இது துரோகத்துக்குக் கொடுக்கும் பரிசா? இல்லை ‘நல்லா போட்டுக் கொடுத்தே… இந்தா பங்க் வச்சிக்கோ’ என்று கொடுக்கும் கமிஷனா?

தருமபுரி உடன்பிறப்பு ஒருவர் குமுறுகிறார்… “அண்ணே, நாளைக்கு நாங்க கட்சியைப் போட்டுக் கொடுத்தா எங்களுக்கு டீசல் பங்க் கிடைக்குமா?”

ஏற்கெனவே புகார் மலை! . ஏற்கெனவே எம்.பி மணி மீது கட்சிக்குள் செம கடுப்பு நிலவுகிறது. ஜாதி பாசத்தால் சொந்தக் கட்சியினரையே தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்தது, பணம் கொடுப்பவர்களுக்கே பதவி எனப் புகார் பைல்கள் மலைபோல் தலைமையில் குவிந்து கிடக்கின்றன. ‘தொண்டர்களை மதிக்க மாட்டேங்கிறார்… தொழிலதிபர்கள் பின்னாடிதான் சுத்துறார்… தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்’ என்பதுதான் தலைமைக்குப் போன அறிக்கையின் சாரம்.

இதையும் படியுங்க  திருச்சி கிழக்கில் 'விஜய்' சாதனையை முறியடிக்குமா தவெக? அறிவாலயத்தின் 2000 ஓட்டு ரகசிய பிளான்..!

இப்போது இந்த பெட்ரோல் பங்க் விவகாரம் பற்றிக்கொண்டது!

இறுதி எச்சரிக்கை! – போட்டுக் கொடுத்தவனின் பெட்ரோல் பங்க்கைத் திறந்து வைப்பதும் தி.மு.க… மாட்டிக்கிட்டவனை சென்ட்ரல் ஜெயிலில் போய்ப் பார்ப்பதும் தி.மு.க… வாழ்க திராவிட மாடல்!

தலைமை இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருந்தால், தருமபுரியில் தி.மு.க கொடியை பெட்ரோல் ஊற்றி எரிப்பதற்கு இந்தப் பங்க் திறப்பே போதும் என்கிறார்கள்.

“நீதி உண்மை என்றால் ரெண்டு பேரும் உள்ளே இருக்க வேண்டும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய எம்.பி மீது நடவடிக்கை வேண்டும் என போலீஸுக்கும் தி.மு.க தலைமைக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். இல்லையென்றால் ரெண்டு பேருக்கும் அவரே பங்க் திறந்து வைக்கட்டும் அதை கட்சி தலைமை ஆதரிக்கட்டும் … இந்த லங்கடா அரசியல் வேண்டாம் எங்கள் வேலையை நாங்க பார்த்துக்குறோம். என்ன நாங்க சொல்றது?” என்கிறார்கள் தருமபுரி உடன்பிறப்புகள்.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago