Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

vijay Stalin

தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் இல்லத்தில், தற்போதைய த.வெ.க அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் விசாரணை அமைப்புகள் திடீர்ச் சோதனையில் இறங்கியுள்ளது. இந்தச் சோதனையைத் தொடர்ந்து, த.வெ.க அரசுக்கு எதிராக தி.மு.க தரப்பு ஒட்டுமொத்தமாகப் போர்க்கொடி தூக்கியுள்ளது.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, த.வெ.க அரசை மிகக் காரசாரமாகத் தாக்கி வெளியிட்டுள்ளார். “திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இல்லத்தில் மீண்டும் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தவெக அரசு. நிர்வாகத் தோல்வியால் எழுந்துள்ள மக்கள் கோபத்தைத் திசைதிருப்பவும், இடைத்தேர்தல் தோல்வி பயத்திலும் சோதனை, கைது என நாடகமாடுகிறது தவெக அரசு. இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் கழகம் அஞ்சாது” எனக் கூறியுள்ளார்.

KN.Nehru

திமுக தலைவர்கள் பலரும் நேரு வீட்டில் நடக்கும் சோதனைகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் கடுப்பான தவெக ஐடி விங்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மூலை முடுக்குகள் எல்லாம் ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல் சொத்துகள். ஆனால், எங்களை ஒன்றும் செய்யவே முடியாது என்று வீரவசனம் வேறு. முன் ஜாமீன் முன்னேற்றக் கழகம் ஊழல் வழக்குகளில் மூச்சுத் திணறிக்கொண்டே முட்டாள்தனத்தின் உச்சமான பஞ்ச் வசனங்களை உதிர்க்கிறது.

இதையும் படியுங்க  "ஆட்சிகள் மாறலாம்... அண்ணாதான் என்றைக்கும் ஆள்கிறார்!" – அண்ணா பிறந்தநாளில் மு.க.ஸ்டாலினின்  பதிவு!

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அதிர்ச்சியே இன்னும் தாங்கவில்லை. இனி தங்களுக்கு ஆட்சி என்பதே எட்டாக் கனி என்பதையும் உணர்ந்ததால்தான் இரண்டாம் இடம் கிடைத்ததே பெரும்பாடு என்று கொசு அடித்துக் கொண்டிருக்கின்றனர் கொத்தடிமைகள்.

Kanimozhi

திருச்சியில் மட்டுமன்று. திரும்பிய பக்கமெல்லாம் முன்ஜாமீன் முன்னேற்றக் கழகத்தை முடித்துவிடவே தமிழக மக்கள் முடிவுடன் இருக்கின்றனர். எனவே, பஞ்சரான பஞ்ச் வசனங்களைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்று அன்புடன் எச்சரிக்கின்றோம். முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்” என கடுமையாக விமர்சித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago