Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தனது சகோதரியை தனியாக கேப் (Cab) மூலம் அனுப்ப வந்த சகோதரர்களிடம், அந்த கேப் ஓட்டுநர் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சம்பவத்தில், ஒரு பெண் தனியாகப் பயணம் செய்வதற்காக கேப் முன்பதிவு செய்திருந்தார். அவரை வழியனுப்ப அவரது சகோதரர்கள் உடன் வந்திருந்தனர். அப்போது அந்த பெண்ணின் பாதுகாப்பு குறித்து சகோதரர்கள் கவலை தெரிவித்ததை கவனித்த கேப் ஓட்டுநர், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மிகுந்த கனிவுடன் பேசினார்.

“என்னுடைய வீட்டு முகவரி இதோ இங்கே உள்ளது. விரும்பினால் இதன் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம், எந்தத் தடையும் இல்லை,” என அவர் கூறினார்.

மேலும், “உங்களுடைய சகோதரர் ஒரு யூடியூபர் என்பதால் எந்தவித பயமும் தேவையில்லை. நான் இவரை என் சொந்தத் தங்கை போலவே முழுமையான பாதுகாப்புடன் அழைத்துச் செல்வேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” எனவும் அவர் நம்பிக்கையளித்தார்.

இதையும் படியுங்க  "பெற்றோர்களே ஒரு நொடி உஷார்! 3 வயது குழந்தையின் உயிரைப் பறித்த ஒரு குட்டி நிலக்கடலை…

அத்துடன், “சகோதரா, எந்தப் பயமும் இல்லாமல் நிம்மதியாக இருங்கள். உங்கள் சொந்த அண்ணன் அல்லது தம்பியின் காரில் அவர் பயணம் செய்கிறார் என்று எண்ணிக் கொள்ளுங்கள்,” எனவும் அவர் கூறினார்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், ஒரு கேப் ஓட்டுநர் பொறுப்புணர்வுடனும், குடும்ப உறவுபோன்ற பாசத்துடனும் பேசிய இந்த வார்த்தைகள் இணையவாசிகளின் மனதை கவர்ந்துள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago