தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி, ஒட்டுமொத்த கோலிவுட்டின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் ஜேசன் சஞ்சய். தற்போது, தமிழக அரசியல் களத்தின் மையப்புள்ளியாகவும், முதலமைச்சராகவும் கம்பீரமாக வீற்றிருக்கும் விஜய்யின் மகன் என்ற கூடுதல் அடையாளமும் இவருக்கு உண்டு. “அடுத்த படம் எப்போது?” என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் நிலவி வந்த வேளையில், யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி ட்விஸ்டாக, தமிழ்நாட்டின் முன்னணி நகைக்கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசிடராக (விளம்பரத் தூதர்) ஜேசன் சஞ்சய் அதிரடியாகக் களமிறங்கியுள்ளார்.
வரலாற்றை மாற்றியமைக்கும் வாரிசு
கடந்த 2010 ஆம் ஆண்டு, இதேபோன்ற ஒரு முன்னணி நகைக்கடை நிறுவனத்தின் விளம்பரத் தூதராக நடிகர் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டார். வெறும் விளம்பரமாக மட்டுமில்லாமல், உணர்வுப்பூர்வமான குறும்படங்களாக வெளியான அந்த விளம்பரங்கள், அப்போது ரசிகர்களிடையே மாபெரும் அலையை ஏற்படுத்தின. சரியாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பாணியில் அப்பாவின் வழியைப் பின்பற்றி விளம்பரத் தூதராக ஜேசன் சஞ்சய் உருவெடுத்துள்ளார்.

பயந்து நடுங்கிய நிறுவனம்
தமிழக முதலமைச்சரின் மகன் என்பதால், இந்த விளம்பர ஒப்பந்தத்திற்கு ஜேசன் சஞ்சய் சம்மதிப்பாரா? மாட்டாரா என்ற மிகப்பெரிய தயக்கத்துடனும், சந்தேகத்துடனும் தான் அந்த நகைக்கடை நிறுவனம் அவரிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. “முடிவை நாளை சொல்கிறேன்” என சஞ்சய் சொன்னபோது, நிறுவனம் சற்று கலக்கமடைந்தது உண்மை. ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, மறுநாளே ஜேசனே போன் செய்து இந்த விளம்பரத்திற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
தலையிடாத தந்தை
இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் எந்தவொரு தலையீடும் செய்யவில்லை என்கிறார்கள். “உன்னுடைய அடையாளத்தை நீதான் கட்டமைக்க வேண்டும்” என்று ஆரம்பத்திலிருந்தே சஞ்சய்க்கு விஜய் கொடுத்த சுதந்திரமும் அட்வைஸும் தான், இந்த விளம்பர ஒப்பந்தத்திற்கு அவர் உடனடியாகச் சம்மதிக்கக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

சஞ்சயின் சபதம்
அப்பாவின் அரசியல் அங்கீகாரத்தையோ, முதலமைச்சர் என்ற பதவியையோ எங்கும் பயன்படுத்த விரும்பாத சஞ்சய், தனது சுய உழைப்பில் தனிப் பாதையை உருவாக்கத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில், “அப்பாவின் இந்த இமாலய அரசியல் வெற்றிக்கும், அவரது நற்பெயருக்கும் தனது எந்தவொரு செயல்பாடும், சிறு கெட்ட பெயரைக் கூட உருவாக்கிவிடக் கூடாது” என்பதில் ஜேசன் சஞ்சய் மிகவும் கண்ணும் கருத்துமாக, மிக எச்சரிக்கையாக இருக்கிறாராம்.
சினிமா, இயக்கம், விளம்பரம் எனத் தனது சொந்தக் காலில் ஜேசன் சஞ்சய் எடுக்கும் ஒவ்வொரு நகர்வும், கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
