Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீது தற்பொழுது கோடிக்கணக்கான ரூபாய் மெகா லஞ்சப் புகார் பாய்ந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்காக, அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பு ஒவ்வொரு பள்ளியிடம் இருந்தும் பல லட்சங்களை லஞ்சமாகச் சுருட்டியதாகத் தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் தற்பொழுது ஏ டு இசட் ஆதாரங்களுடன் வெடி கிளப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தை அப்படியே அரசியல் அஸ்திரமாக மாற்றி, மேடையில் வைத்து மரண மாஸ் சவால் விடுத்துள்ளார் தற்போதைய தவெக அமைச்சர் ஆதவ அர்ஜுனா. பொது மேடை ஒன்றில் மைக் பிடித்த அவர், “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தனியார் பள்ளியிடமும் தலா 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீடியாவிற்கு முன்னால் வந்து நேராகப் பேசத் தயாரா? தில் இருந்தால் சவாலை ஏற்கட்டும்!” எனப் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார்.

இதையும் படியுங்க  எ.வ.வேலு சிங்கப்பூர் பறந்த மர்மம்..! 50 நாள் அருணின் ஆட்டம்… ஒரே இரவில் காலி..!

தனியார் பள்ளி சங்கங்களின் இந்த மெகா குற்றச்சாட்டும், அமைச்சர் ஆதவ அர்ஜுனாவின் அதிரடி சவாலும் கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்பொழுது அதிகாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குக் கைமாறியுள்ளது. லஞ்சப் பணம் யார் மூலமாக கைமாறியது என்ற நெட்வொர்க்கை போலீசார் ரகசியமாகத் தோண்டி எடுத்து வருகின்றனர். மிக விரைவில் இந்த வழக்கின் எஃப்.ஐ.ஆர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் பெயர் சேர்க்கப்பட்டு, அவருக்குக் கைவிலங்கு பூட்டுவதற்கான அத்தனை சட்ட நடவடிக்கைகளும் பின்னணியில் ராக்கெட் வேகத்தில் பாய்ந்து வருகின்றன. இதனால் திமுக கேம்ப் தற்பொழுது கடுமையான கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago