செப்டம்பர் 7-ம் தேதி போலீஸ் மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலுரையாற்ற இருக்கிறார் முதலமைச்சர் விஜய். கடந்த வியாழக்கிழமை சட்டமன்றத்தில் இருந்து கிளம்புகிறபோது பேரவை தலைவரை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே ”நான் திங்கட்கிழமை அன்னைக்கு ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப டீடைல்லா பதில் சொல்றேன். ஆனா பதிலை கேட்காம அவங்க அதாவது திமுகா நடுவுல எழுந்துருச்சு ஓடிப் போயிடக்கூடாது அப்படின்னு நீங்க பிராமிஸ் பண்ண சொல்லுங்க” என ஒரு வம்பை இழுத்துவிட்டு போயிருக்கிறார் விஜய்.

முதலமைச்சர் மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே உறுப்பினர் கேட்கிற மாண்புமிகு உறுப்பினர்கள் கேட்கிற எல்லா கேள்விக்கும், அதுக்கான தெளிவான விளக்கத்தை நான் மண்டே வந்து நான் பேசுறேன். நான் இங்க இல்லனா கூட யார் யார் என்ன கேள்வி கேட்கிறாங்கன்றத எனக்கு வந்துரும். எல்லாத்துக்கும் நான் தெளிவான பதில் சொல்றேன். உங்க சார்பா அவங்க கிட்ட ஒரு பிராமிஸ் ஒன்னு கேட்கிறேன் யாரும். எழுந்துருச்சு ஓடிடக்கூடாது” எனச் சொன்னார் விஜய். அதாவது திமுக தலைவர்கள் கத்தி கூச்சல் போட்டு வெளிநடப்பு செய்கிற அளவுக்கு முதலமைச்சரோட பதிலுரை செம்ம காரசாரமாக இருக்கும் என தவெக தரப்பில் அந்த மூவ்மெண்ட்டை கொண்டாட ரொம்பவே தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கான தயாரிப்புகளும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் காவல் துறையினருக்கான நல்வாழ்வு திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் விஜயின் பேச்சில் முக்கியமாக இருக்கும் எனச் சொல்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியில் 5 வருஷத்தில் மொத்தம் 1400 புதிய போலீஸ் பணியிடங்கள் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தவெக ஆட்சியில் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 5000 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை விஜய் சுட்டிக்காட்டப் போகிறாராம். திமுக ஆட்சியில் சென்னைக்குள் ஆவடி, தாம்பரம் எனஅந்த புதிய மாநகர காவல் ஆணையரகங்களை உருவாக்கினார்கள். ஆனால் போதிய போலீசாரை நியமிக்காமல் மற்ற மாவட்டங்களில் இருந்து ஆட்களை குறைத்து இங்கே கொண்டு வந்து அதை நிர்வகிக்கிறார்கள்.

இதனால் அந்தந்த மாவட்டங்களிலேயே போலீஸ் பற்றாக்குறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்து போனது. இது எல்லாவற்றையும் சரி செய்வதற்காக இந்த ஒரே வருஷத்தில் 10,000 போலீசாரை புதிதாக வேலைக்கு எடுக்கப் போகிறோம் என்கிற மாஸ் அறிவிப்பையும் சிஎம் வெளியிட போகிறாராம். அடுத்து ஆண்டாண்டு காலமாக இந்த போலீஸ்காரர்களுக்க அரசாங்கமே கொடுக்கிற யூனிபார்ம் தரம் இல்லாததால் அவர்கள் அதை ஆட்டோ டிரைவர்களுக்கு தூக்கி கொடுத்துவிட்டு சொந்தமாக அவர்களது பணத்தில் காக்கி சட்டையை தைத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது காவல் துறையினருக்கு உயர்தரமான யூனிபார்மை கொடுப்பதற்கு விஜய் முடிவு பண்ணி இருக்கிறாராம். அதே போல வெள்ளையர் காலத்து பட்டனில் இருக்கிற சிங்கம் டிசைனுக்குப் பதிலாக அதாவது போலீஸ்காரர்களுக்கு அந்த முகப்பு பக்கத்தில் 3 பட்டனும், சோல்டரில் ரெண்டு பட்டனும், பாக்கெட்டில், இரண்டு பட்டனும், மொத்தம் ஏழு பட்டன் இருக்கும் சிங்கம் பதிச்சு ஒரு சில்வர் கலரில் இருக்கும். ஆகையால் அந்த பட்டனை இப்போது நவீன காலத்துக்கு ஏற்றாற்போல ஒரு மாஸாக மாற்றம் செய்யப்போகிறார்கள்.

முக்கியமாக பெண் போலீசார் விஜய் மீது ரொம்ப நம்பிக்கையில் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் பொண்ணுங்க ஓட்டு மொத்தமும் விஜய்க்குத்தான் விழுந்தது. இதை மனதில் வைத்து பெண் போலீசாருக்கு மாதம் மூன்று நாள் மாதவிடாய் விடுமுறை அறிவிக்கவும் சிஎம் விஜய் பிளான் செய்திருக்கிறார். இதோடு சேர்த்து உயர்த்தப்படாத சில அலவன்ஸ்களையும் உயர்த்த போகிறார் என ஆளும் தரப்பில் ரொம்ப சீரியஸாக சொல்கிறார்கள்.
