“இந்தியன் 2” படத்தை திரையரங்கில் பார்த்த பாவத்திற்கு ரசிகர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்தே மீண்டு வரவில்லை. அதற்குள்ளாகவா?! ஆம், “தாத்தா மீண்டும் வரப்போகிறார்” என்கிற செய்திதான் இப்போது கோலிவுட் வட்டாரத்தின் ஹாட் டாபிக்.
‘இந்தியன் 2’ கொடுத்த மரண மொக்கையை பார்த்துட்டு, தமிழ்நாடே “தாத்தா தயவுசெஞ்சு கதவை சாத்திட்டு உள்ளயே இருங்க”னு கதறியது. ஆனால், “நாங்கள் விடுவதாக இல்லை!” என்பது போல ஷங்கரும் கமலும் மீண்டும் ‘இந்தியன் 3’ வேலைகளை கையில் எடுக்கப் போகிறார்களாம். ஏற்கனவே எடுத்து வச்ச மிச்சமீதி காட்சிகளை தூசி தட்டி, கொஞ்சூண்டு VFX ஸ்பிரே அடிச்சு ரிலீஸ் பண்ண போறாங்களாம். ரசிகர்களின் பொறுமையை மீண்டும் ஒருமுறை சோதிக்க களமிறங்கும் இந்த ‘தாத்தா’ கதையின் பின்னணியை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்!
‘இந்தியன்’ -3 பார்ட்டுக்கான பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தாலும், இப்போது மூன்றாவது பாகத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம்.
சுவாரஸ்யமாக, ‘இந்தியன் 3’ படத்தின் பெரும்பகுதி ஏற்கனவே ‘இந்தியன் 2’ படப்பிடிப்பின்போதே படமாக்கப்பட்டுவிட்டது. இப்படத்திற்குப் புதிதாகப் பெரிய அளவில் படப்பிடிப்பு எதுவும் தேவைப்படாது என்றும், சிறிய அளவிலான சில காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், கணிசமான அளவு கணினி சிஜிஐ பணிகள் மட்டும் இன்னும் பாக்கி.
‘இந்தியன் 2’ படத்திற்குச் சுமாரான வரவேற்பே கிடைத்ததைத் தொடர்ந்து சிஜிஐ வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரடெக்சன் வேலைகளை மீண்டும் தொடங்கி, படத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
கமல்ஹாசன் ‘சேனாபதி’யாக மீண்டும் நடிப்பார் என்றும், ஷங்கர் தொடர்ந்து இயக்குநராகப் பணியாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு ஷங்கர் தனது திரைப்பயணத்தில் சவால்களைச் சந்தித்து வரும் சூழலில், இந்தப் படத்தை பெரிடும் எதிர்பார்த்துள்ளார்.
தற்போதைக்கு, இப்பணிகள் மீண்டும் தொடங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், படப்பிடிப்பின் பெரும்பகுதி ஏற்கனவே முடிந்துவிட்டதால், ‘இந்தியன் 3’ படத்தை விரைவாக நிறைவு செய்து வெளியிடப் படக்குழுவினர் முடிவெடுக்கக்கூடும்.
