DVAC

திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், அரியலூர், தஞ்சை, பெரம்பலூர் நாகையில் செயல்பட்டு வந்த குவாரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் மணல் குவாரிகளில் ரூபாய் 4730 கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டு முதல் இந்த மணல்குவாரி குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

தற்போது அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. 196 ஹெக்டரில் மட்டுமே மணல் அல்ல அனுமதி பெற்று 987 ஹெக்டர் அளவில் மணல் அள்ளியது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 முதல் 30 மடங்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஐடி கான்பூரின் ட்ரோன்கள் இஸ்ரோவின் செயற்கைகோள் படங்கள் உதவியுடன் 28 இடங்களில் இருந்து அதிரடியாக சோதனை நடத்தி ஆய்வு செய்தது. எக்ஸ்கலேட்டர் உள்ளிட்ட வாகனங்கள் ஜிபிஎஸ் தரவு மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்பட்டதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்க  மெஜாரிட்டி கிடைக்காத த.வெ.க…! ஆட்சி அமைப்பதில் சிக்கல்? மீண்டும் வருகிறது தேர்தல்..?

இதன் மூலம் மொத்தம் 6730 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கணக்கிட்டது. குறிப்பாக இந்த முறைக்கேடுகள் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், அரியலூர், தஞ்சை, பெரம்பலூர் அதேபோல் நாகை ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த குவாரிகளில் இந்த முறை நடந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது. மணல் குவாரி அதிபர்கள் உள்ள திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை கதிரவன், ராமச்சந்திரன் இந்த ஊழலில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறது.

ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் பலவும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதம் அப்போதைய தமிழக டிஜிபிக்கு இரண்டு முறை கடிதம் எழுதி இருக்கிறது. ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகள் மீது திரும்ப வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் திமுக ஆட்சியில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக ஆட்சிக்கு வந்த நிலையில் கடந்த மாதம் மணல்குவாரி ஊழல் தொடர்பாக பூர்வாங்க விசாரணை துவங்கியது. முதல் கட்ட
விசாரணையில் ரூ.4530 கோடி ஊழல் முகாந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்துதான் வழக்கு பதிவு செய்யப்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் 30 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படியுங்க  ”9 மாத உழைப்பு திடீர் ரத்து! சென்னை மெகா சாலை திட்டத்தில் தமிழக அரசின் அதிரடி ட்விஸ்ட்:

திண்டுக்கல் தொழில்திபர் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், கரிகாலன் உள்ளிட்டோர தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. அதேபோல் திருச்சியில் உள்ள பொதுப்புணத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. சோதனை முடிவுகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து இரு துறை அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்போது 30 இடங்களில் இது தொடர்பான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மணல் குவாரிகளில் 4730 கோடி ஊழல் நடைபெற்றதாக அமலாக்கதுறை கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *