Model

ஆசை காட்டி மோசம் செய்துவிட்டு அதற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் சிரித்து கொண்டே கெத்தாக காவல் நிலையத்திற்குள் செல்லும் ஃபேஷன் நிறுவன தலைவர் மீது ஆக்ஷன் எடுக்க வேண்டிய போலீசார் கார் வரை வழி அனுப்பி வைப்பதை என்ன சொல்வது? அப்படி இருந்தால் நியாயத்தைதான் எதிர்பார்க்க முடியுமா? என்பதே இந்த மாடல் அழகியின் மனக்குமுறல்.

சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழகி புவனேஸ்வரி. தமிழ்நாடு ஃபேஷன் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன் நடத்திய போட்டியில் மிஸ் சென்னை 2025 என்ற பட்டத்தை வென்ற இவரை இன்ஸ்டாவிலும் லட்சக்கணக்கானோர் ஃபாலோ செய்கின்றனர். ஃபேஷன் துறையில் ஆர்வம் கொண்ட இவர் ட்ரீம் ஷேடோஃஷேன்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். சி.வி.குமார் இயக்கத்தில் மாயவன் சினிமாட்டிக் யூனிவர்ஸ் வரிசையில் உருவாகும் xy என்ற அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.

இந்நிலையில் மாடல் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வரும் சைபா என்றஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் வினோத் சிரஞ்சீவி என்பவர் மீது புவனேஸ்வரி ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகார் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதையும் படியுங்க  "அதிர்ச்சி! தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. 27 வயது இளம் நடிகை அனன்யா ராஜ் திடீர் மரணம்!"

அந்த வகையில் விசாரணைக்கு வந்த மாடல் அழகி வெளியே வந்து செய்தியாளர்களிடம் தனது வருத்தத்தை கொட்டி உள்ளார். இன்ஸ்டாவில் உள்ள தனது போட்டோக்களை பார்த்துவிட்டு தொடர்பு கொண்ட வினோத் சிரஞ்சீவி தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாகவும் கூறி ரூபாய் 10 லட்சத்தை பெற்றுக்கொண்டு விபூதி அடித்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

”நானும் ஒரு 10 லட்சம் ரூபாய் மேல இன்வெஸ்ட் பண்ணிருக்கேன். சோ பண்ணதுக்கு எனக்கு ப்ராபிட் பண்ணி கொடுக்கல. அது இல்லாம வந்து லவ் பண்றேன் கல்யாணம் பண்ணிக்கிறேன் அப்படின்னு அந்த பேக்கான வேர்ட்ஸ் எல்லாம் சொல்றது. அதோட கண்டினிவேஷன்ல இருக்கும்போது என்னை ட்ராப் பண்ணிட்டாரு, அது இல்லாம வெஞ்சன்ஸ் அவருக்கு அதிகம்.” என்கிறார்.

தன்னை போன்றே நிறைய பெண்களை அவர் காதல் வளையில் வீழ்த்தியதாகவும் அதற்கு ஆதாரமாக சில ஆடியோக்களையும் காட்டும் புவனேஸ்வரி தனது நகைகளை விற்றுதான் ரூபாய் 10 லட்சத்தையே கொடுத்ததாகவும் கூறினார்.
”மாடல்ஸ் யார் வந்தாலும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறார். இதுக்கான ப்ரூப் என்கிட்ட இருக்கு. ஆடியோ ப்ரூப் இருக்கு. இல்ல சம்பந்தப்பட்ட பொண்ணுங்க யாரையாவது நேர்ல சப்மிட் பண்ணனும் அப்படின்னு சொன்னாலுமே நான் அங்கள கூட்டிட்டு வர ரெடியா இருக்கேன். முக்கியமா பொண்ணுங்க விஷயத்துல ரொம்ப மோசமா நடந்திருக்காரு” என்கிறார்.

இதையும் படியுங்க  அப்பா தவிர்த்த விளம்பர உலகம்... சொந்த அடையாளத்துடன் சஞ்சய்யின் மாஸ் எண்ட்ரி! சல்லானியின் பிரம்மாண்ட கூட்டணி!

பல பெண்களை ஏமாற்றிவிட்டு வீட்டில் வரன் பார்த்த வேறொரு பெண்ணை திருமணம் செய்த வினோத் சிரஞ்சீவி ஆண்களிடமும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்ததாகவும் குற்றம் சாட்டிய மாடல் அழகி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என பலரை மிரட்டி உள்ளதாகவும் கூறினார்.

”யார் எந்த பொண்ணு வந்தாலும் கண்டிப்பா அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிதான் ஆகணும். எந்த ஈவெண்ட்டா இருந்தாலும் பண்ணனும். அவர் கூட இருக்கவங்க கூட பண்ணனும். அப்படின்னல்லாம் ரொம்ப கம்பல் பண்ணிருக்காரு. இப்ப வந்து வீட்ல பார்த்து போனதான் கல்யாணம் பண்ணிருப்பாரு. ஆண்கள் யாராவது அவரு கிட்ட பிரச்சனை பண்ணா அவர் ஆள் செட் பண்ணி அடிக்கறது. அவரோட வேலையே கட்ட பஞ்சாயத்து பண்றது.” என்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியபோது செத்தால் சாவு என வினோத் சிரஞ்சீவி கூறியதாக தெரிவித்த மாடல் அழகி ஆதாரம் இருந்தும் அம்பத்தூர் போலீசார் வினோத் சிரஞ்சீவிக்கு தான் சப்போர்ட் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். ”இன்ஸ்பெக்டர் சார் விசாரணை பண்ணாங்க. பண்ணும்போது எல்லாமே கேட்டுட்டு கடைசியா வினோத்துக்கு சாதகமா பேசுற மாதிரி பேசி இருக்காங்க. இங்க நான் எதிர்பார்த்த எந்த நியாயமும் எனக்கு கிடைக்கவே இல்ல. இது ஏதாவது பிரச்சனையாகி நான் சூசைட் பண்ணா என்ன பண்ணீங்கன்னு கேட்டால், செத்தா சாவு அப்படின்ற மாதிரி அவர் பேசுகிறார்” என்கிறார்.

இதையும் படியுங்க  ”வித்தியாசமான கதைக்களத்தில் விஜய் சேதுபதி; புதிய படத்தை கையில் எடுத்த கிருத்திகா உதயநிதி!"

இதனிடையே புவனேஸ்வரியின் புகார் குறித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்த வினோத் சிரஞ்சீவியை சிலர் வீடியோ எடுத்தனர். அப்போது சிரித்தபடியே கூலாக வந்த அவர் செய்தியாளர்களின் கேள்விகளை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது என்னவென்றால் அவரை போலீசாரே பாதுகாப்பாக கார் வரை வந்து வழி அனுப்பி வைத்ததுதான். இது ஒருபுறம் இருக்க புவனேஸ்வரியின் புகாரில் உண்மையில்லை எனவும் தன்மீது தவறு இல்லாததால் தான் சிரித்தபடியே காவல் நிலையத்திற்கு சென்றதாகவும் விளக்கம் அளித்த வினோத் சிரஞ்சீவி பணம் பறிக்க மாடல் அழகின் நாடகம் போடுவதாகவும் அதனை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தயார் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *