https://republictn.com/

தமிழ் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் ‘தளபதி’ விஜய் ஆகிய இருவரின் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைத்தளங்களில் நடக்கும் டிஜிட்டல் போர் தற்போதைய 2026-லும் ஓயப் பாடில்லை. சொல்லப்போனால், இது முன்னெப்போதையும் விட இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த ரசிகர் சண்டையின் தாக்கம் தற்போது ரஜினிகாந்தின் படப்பிடிப்புத் தளத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு படம் நூறு சதவீதம் சூப்பர் ஹிட்டாக வேண்டும் என்று ரஜினி நினைப்பது வழக்கம் தான் என்றாலும், இந்த முறை ‘ஜெயிலர் 2’ விஷயத்தில் அவர் காட்டும் அசுர வேகம் மற்றும் பிடிவாதத்திற்குப் பின்னால் ஒரு ‘விஜய் ரசிகர்களின் பயம்’ கலந்த அரசியல் இருப்பதாகத் திரையுலகினர் முணுமுணுக்கிறார்கள்.

இதற்கு முக்கிய புள்ளியாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ படத்தின் டீசர் தான். அந்த டீசர் வெளியான போது, அதில் ரஜினி அமர்ந்திருந்த நாற்காலிய மட்டுமே குறிவைத்து விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்ஸ்களையும், கணக்கிலடங்கா ட்ரோல் வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் அள்ளி வீசினர். இந்த நெகட்டிவ் விமர்சனங்களும் வன்மமும் ரஜினியின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

விஜய் ரசிகர்கள் தங்களது அடுத்த படத்தைக் குறை சொல்லவும், தியேட்டரில் வைத்து வறுத்தெடுக்கவும் மரண வெயிட்டிங்கில் காத்திருக்கிறார்கள் என்பதை ரஜினி நன்றாகவே உணர்ந்துள்ளார். அவர்களுக்கு ஒரு ‘கடுகு அளவு’ கூட தங்களுக்குச் சாதகமான வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். இதன் காரணமாகவே, இயக்குனர் நெல்சன் கண்டெண்ட்டை டபுள் ஸ்ட்ராங்காக மாற்ற எத்தனை முறை ‘ரி-ஷூட்’ செய்யக் கேட்டாலும், ரஜினி சற்றும் சலிக்காமல், கோபப்படாமல் உடனடியாகத் தனது கால்ஷீட் நாட்களை வாரி வழங்கி வருகிறார். விஜய் ரசிகர்களின் ட்ரோல்களுக்கு அஞ்சி, படம் தியேட்டருக்கு வரும் முன்பே செதுக்கப்படும் ‘ஜெயிலர் 2’ தப்பிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago