Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை நடிகை சமந்தா ரூத் பிரபு நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமந்தா தயாரித்து நடித்துள்ள ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளுக்காக சென்னை வந்திருந்தபோது இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட சமந்தா, “விஜய் சார் வெறும் திரையில் தோன்றும் ஹீரோவாக மட்டும் இருக்க வேண்டியவர் அல்ல. அவரது ஆற்றலும், மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும், அவர் மிகப் பெரிய நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டவர் என்பதை உணர்த்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சினிமா துறையில் உச்சத்தை எட்டிய நிலையிலும், அதிக சவால்கள் நிறைந்த அரசியல் களத்தைத் தேர்ந்தெடுத்த விஜய்யின் துணிச்சல் தன்னை மிகவும் ஊக்குவிப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

திரையில் ‘கத்தி’, ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் இணைந்து நடித்த இந்த வெற்றிக் கூட்டணி, தற்போது அரசியல் தளத்தில் சந்தித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க  "அவர் கேட்ட அந்த ஒரே ஒரு விஷயம்.. த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு! பாதியிலேயே நின்ற கல்யாண ரகசியம்!"

சென்னைக்கு வந்தவுடன் தனக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள சமந்தா, தனது நீண்டகால சக நடிகரான விஜய்யை அரசியல் தலைவராக சந்தித்தது தனக்கு பெரும் ஊக்கத்தை அளித்ததாக கூறியுள்ளார்.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago