ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம் இப்போது மிகப்பெரிய அளவில் சட்ட ரீதியாகவும், அதிகாரிகள் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பயங்கர விவகாரம் ஆகிக் கொண்டே போகிறது.
வீரமணி மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் வீரமணியை காப்பாற்றியது யார்? என்கிற கேள்வியை நோக்கி சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை நீடித்துக் கொண்டே இருக்கிறது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாகத்தான் அப்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐபிஎஸ் இப்போது துறைரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ விவகாரத்தில் முன்னாள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் ஐபிஎஸ் மற்றும் சில உயர் அதிகாரிகள் மீதான விசாரணை தற்போது மிக தீவிரமடைந்துள்ளது.
அக்டோபர் 2025-ல் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல், “ஆதாரங்கள் போதாது” என முடித்து வைக்க முயன்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, செப்டம்பர் 2024-ல் அருண் ஐபிஎஸ், ஐஜி கண்ணன் ஐபிஎஸ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவினர், அருண் ஐபிஎஸ்-ஐ நேரில் வரவழைத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக, 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். வீரமணியைக் காப்பாற்ற ரூ. 24 கோடி முதல் ரூ. 40 கோடி வரை லஞ்சம் கைமாறியதாக நீதிமன்றத்தில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த லஞ்சப் பணத்தில் அருண் ஐபிஎஸ் தனியார் நகைக்கடையில் தங்கக் கட்டிகளை வாங்கியதாக வாராகி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த டிஜிட்டல் மற்றும் ஆவண ஆதாரங்களை SIT அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்
கூடிய சீக்கிரமே அருண் ஐபிஎஸ் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு அவரும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்கிற தகவல்களை அதிகாரிகளே சொல்கிறார்கள். இது தொடர்பாகல் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது ”ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் மிஸ்டேக் ஆஃப்ஸ் என்கிற அடிப்படையில் மூடப்பட்டபோது மாநகர போலீஸ் கமிஷனராக அருண்தான் இருந்தார்.

இருந்தாலும் வீரமணியை காப்பாற்றுவதற்காக நடந்த அந்த பண பரிமாற்றங்களில் அருணை தொடர்பு படுத்துகிற வகையில் நேரடியான தெளிவான ஆதாரங்கள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. ஆகையால் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படுவது என்பது இப்போது வரை ஆலோசனை வடிவில்தான் இருக்கிறது. எஃப்ஐஆரில் அவர் சிக்க மாட்டார்” என் கிறார்கள். ஆனால் சில முக்கிய அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் விசாரித்தால் ”இருக்கு ஆதாரங்கள் இருக்கு. சீக்கிரமாக எஃப்ஐஆர் கன்பார்ம்” எனச் சொல்கிறார்கள்.
