தென் தமிழக மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, திருநெல்வேலி சூரியா மருத்துவமனை அரிய வகை மறு இரட்டை வால்வு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து சாதனை படைத்துள்ளது! உயிருக்கு ஆபத்தான நிலையில் மூச்சுத்திணறலால் தவித்த நோயாளிக்கு, நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தையும் அனுபவமிக்க மருத்துவர்களின் கூட்டு முயற்சியையும் கொண்டு மறுவாழ்வு அளித்துள்ளது இச்சாதனை.
சென்னை, சாலிகிராமத்தில் பகுதியில் அமைந்துள்ள சூரியா மருத்துவமனை 1991-ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பன்னாட்டுத் தரத்திலான மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை. தற்போது கோடம்பாக்கம், நெல்லை, பள்ளிக்கரணை, எழும்பூர், நேபாளத்தில் காத்மாண்டு, நாகர்கோயில், கன்னியாகுமரியிலும் சூர்யா மருத்துவமனை இயங்கி வருகிறது. துபாயில் வெல்னஸ் சென்டரை துவங்கி மருத்துவ சேவையில் முத்திரை பதித்து வருகிறது.

இந்நிலையில், தென் தமிழகத்தில் முதன்முறையாக இருதய இரட்டை வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து நெல்லை சூரியா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. இது குறித்து இந்த மருத்துவமனையின் தலைமை டாக்டர் சங்கர் பால சுப்பிரமணியன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கடந்த 2010 ஆம் ஆண்டு இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய அருண் என்பவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட வால்வு மற்றும் மற்றொரு வால்வு சுருங்கி 6 மாத காலமாக கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து திருநெல்வேலி சூரியா மருத்துவமனைக்கு அவர் வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பிறகு எனது தலைமையிலான மருத்துவ குழுவினர் டாக்டர் சஞ்சீவ் பாண்டியன், டாக்டர் சங்கர வடிவேலன், பசுபதி நாராயணன், சுகுணா, பிரசாந்த், உள்ளிட்ட மருத்துவ குழுவினர் இணைந்து பணியாற்றி மறு இரட்டை வால்வு மாற்று அறுவை சிகிச்சையை தேர்வு செய்தோம். தென் தமிழகத்தில் முதன் முறையாக ஒரே நேரத்தில் இந்த மறு வால்வு முறையை மாற்றி அமைத்து வெற்றிகரமாக சாதனை படைத்தோம்.
இவரது சிகிச்சைக்கு ரோட்டரி கிளப் ஆப் துவரங்குறிச்சி நிதி உதவி வழங்கி உதவியது. அறுவை சிகிச்சைக்கு பின் 3வது நாளே நோயாளி வார்டுக்கு மாற்றப்பட்டு 2 வாரங்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்” எனக் கூறினார்.
