Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay Flight

புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தற்போது திருச்சி விமானத்தை வருகை தந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு வேளாந்துறை மற்றும் கலை பண்பாட்டு துறை ஆணையங்களை முதலமைச்சர் பார்வையிடுகிறார்.

அதனை தொடர்ந்து மாவட்டத்தில் 68 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து மற்றும் 12.72 கோடி மதிப்பிலான புதிய பணிகளையும் அறிக்கை நாட்டுகிறார். அதனை தொடர்ந்து பல்வேறு துறையில் தேர்வு செய்யப்பட்ட யணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார். அதேபோன்று புதிதாக அந்த பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார்.

flight

முதலமைச்சர் விஜய் அவர்கள் பொதுவாக நீண்ட தூரப் பயணங்களுக்கு இத்தகைய தனி சார்ட்டர் விமானங்களையும், தமிழ்நாட்டின் உட்பகுதிகளில் தேர்தல் பரப்புரை மற்றும் அவசரப் பயணங்களுக்குக் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் VT-KJI போன்ற ஹெலிகாப்டர்களையும் வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்க  கொளத்தூரில் வாங்கிய செம்படி..! பறிபோகும் சேகர்பாபு பவர்..! திமுகவில் அரங்கேறும் அதிரடி..!

தமிழக முதலமைச்சர் விஜய் தனது அலுவல்முறை, அரசியல் பயணங்களுக்காகப் VT-VIK மற்றும் VT-CMR ஆகிய எம்பிரேயர் லெகசி 600 ரகத் தனி விஐபி விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த எம்பிரேயர் நிறுவனத்தின் Embraer ERJ-135BJ Legacy 600 என்ற அதிநவீன சொகுசுத் தனி விமான மாடல் இது. இது ‘ரித்விக் ஏவியேஷன்’ நிறுவனத்தால் இயக்கப்படும் 13 பேர் பயணிக்கக்கூடிய சொகுசு விமானம். VT-CMR: இது ‘வி.எஸ்.ஆர் ஏவியேஷன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான அதே எம்பிரேயர் லெகசி 600 ரக விமானமாகும். இதன் வால் பகுதியில் ‘CMR’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்த விமானத்தில்க் தலா 13 பயணிகள் வரை சொகுசாக அமர்ந்து பயணிக்கும் வசதி கொண்டவை. ஒரே முறையில் தொடர்ந்து சுமார் 5,650 கி.மீ முதல் 6,390 கி.மீ தூரம் வரை (சுமார் 6 மணி நேரத்திற்கும் மேல்) இடைநில்லாமல் பறக்கும் திறன் கொண்டவை.

புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் போன்ற அரசுத் திட்டங்களைத் திறந்து வைப்பதற்காக, நவம்பர் 2, 2026 அன்று காலையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் சென்னையிலிருந்து திருச்சிக்கு இந்த VT-VIK / CMR தனி விமானம் மூலமாகவே பயணித்தார்.

இதையும் படியுங்க  "பச்சை குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை!" செஞ்சி சிறுமி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரடியாகச் சாடிய உதயநிதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 hours ago at 11 hours ago