Modi trump

இனி ‘டிரம்ப் கார்டு’ வேலை செய்யாது!அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, அமெரிக்காவுடனான உறவை வலுபடுத்த இந்தியா தனது வெளியுறவு கொள்கை அணுகு முறையை விரிவுபடுத்த வேண்டும் என்கிறார்கள் வெளியுறவு நிபுணர்கள்.

அமெரிக்காவின் அரசியல் மாற்றங்களை குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்ற இரு பிரிவுகளாக மட்டும் பார்க்காமல் இரு கட்சிகளுக்குள்ளும் நிலவும் அரசியல் வேறுபாடுகளை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று வெளியிரவுத்ததுறை நிபுணர்கள் தெருவுக்கின்றனர். ட்ரம்ப் நிர்வாகத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதுடன் எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மற்றும் 2000ங்களில் இந்தியா பின்பற்றிய தூதரக அணுகுமுறையை மீண்டும் கடைபிடிக்க வேண்டும என்றும் அமெரிக்க நாடாளுமன்றம், வர்த்தக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சிந்தனை குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் உறவுகளை வளர்க்க வேண்டும் என்றும் வெளியுறவு நிபுடர்கள் தெருவுத்துள்ளனர். 2008ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கா இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் இத்தகைய முயற்சிகளின் விளைவாகவே சாத்தியமானது என சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையும் படியுங்க  குலுங்கிய வீடுகள்.. அலறி அடித்து ஓடிய மக்கள்! ஆந்திராவை உலுக்கிய அதிகாலை நிலநடுக்கம்..

குடியரசு கட்சியில் ட்ரம்பின் தேசியவாத கொள்கைகளும் ஜனநாயக கட்சியில் முற்போக்கு அரசியல் சக்திகளின் எழுச்சியும் அமெரிக்க அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. வர்த்தகம், குடியேற்றம், மனித உரிமைகள், ரஷ்யா உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவை விமர்சிப்பவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்கிறார்கள். வெளியிரவு துறை நிபுணர்கள். இந்திய அரசுடன் மட்டும் இந்த முயற்சிகளை நிறுத்தி விடாமல் அரசியல் கட்சிகள், வர்த்தக அமைப்புகள், குடிமை சமூகத்தினர் ஆகியோரும் அமெரிக்காவின் பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளை வெளிப்படுத்த வேண்டும் என கூறுகிறார்கள் வெளியிரவு துறை நிபுணர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *