Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தின் நிதி நிலைமை பெரும் சவாலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வெளிக்கடன்களைக் குறைத்து, அரசின் வருமானத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்பது குறித்து முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் அதிரடி ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

“தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கடன் தொகை 20 லட்சம் கோடியாக எகிறிவிடும்” என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விடுத்த சவாலை, முதல்வர் விஜய் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள்.

கமிஷன் மாஃபியாவுக்கு செக்!
கடன் சுமையைக் குறைக்க அமைச்சர்கள் சிலர் முதல்வரிடம் ஒரு அதிரடியான ‘சூப்பர் ஃபார்முலா’வை முன்வைத்துள்ளனர். இதுவரை டாஸ்மாக்கில் அரசு கணக்கில் வராமல், தனிநபர்கள் கைகளுக்குச் சென்று புழங்கி வந்த 1,000 கோடிக்கும் மேலான ‘கருப்பு பணத்தை தவெக அரசு எப்படி பக்கா சீர்திருத்தம் மூலம் நேரடியாக அரசு கணக்கிற்குக் கொண்டு வந்ததோ, அதே பாணியை மற்ற துறைகளிலும் கையில் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, கனிமவளத்துறை, நீர்வளத்துறை, பத்திரப்பதிவுத் துறை போன்ற பல்லாயிரம் கோடி ரூபாய் புழங்கும் முக்கிய துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அதிகாரத்துவத்தின் கைகளிலும், இடைத்தரகர்களிடமும் புரண்டு வந்த லஞ்சப் பணத்தை அப்பட்டமாகத் தடுத்து, நேராக அரசு கஜானாவில் சேர்த்தாலே மாநிலத்தின் வருவாய் தாறுமாறாக எகிறும் என அமைச்சர்கள் கணக்கு போட்டுள்ளனர்.

இதையும் படியுங்க  "விஜய்க்கு ஒரு நீதி.. சீமானுக்கு ஒரு நீதியா?" – தமிழக அரசைத் தலை குனிய வைத்த உயர் நீதிமன்றத்தின் அதிரடி சாட்டையடி!

நேரடி வெள்ளைப் பணமாகும் கமிஷன்கள்
அதுமட்டுமன்றி, தமிழகத்தில் முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் கமிஷன்களை இனி அரசியல்வாதிகளோ, தனிநபர்களோ கைகளுக்கு மாற்றாமல், சட்டப்பூர்வமாக நேரடியாக அரசு கணக்கிற்கே ‘வெள்ளைப் பணமாக’ மாற்றும் அதிரடி ஐடியாவையும் விஜய் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார். 20 லட்சம் கோடி கடன் சவாலை முறியடித்து, தமிழகத்தை மீட்டெடுக்க விஜய் கையில் எடுத்து அதிரடி காட்ட திட்டமிட்டுள்ளார் விஜய் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தினர்.

Naruvi

By Naruvi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago