Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

நாட்டின் உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரத்தை, சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பாராட்டினார்.

இந்த நிகழ்வின் போது, தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட ₹48 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வீரருக்கு வழங்கினார்.

மேலும், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதலமைச்சர் விஜய் கைகளில் ஏந்தி, தனது மடியில் வைத்து அன்புடன் கொஞ்சிய நெகிழ்ச்சியான காட்சிகள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றிவளைத்து நடைபெற்ற அதிரடி நடவடிக்கையில், முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த நிலையிலும் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குழுவினர் இணைந்து ஐந்து தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று வீரதீர செயலை நிகழ்த்தினர்.

இதையும் படியுங்க  57-ல் 20 எம்பிக்கள் மட்டுமே பங்கேற்பு..! இது அரசியல் கணக்கு தான்.. CM விஜய் ஸ்மார்ட் மூவ்..!

இந்த அசாதாரண வீரத்தை பாராட்டி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஜூன் 8, 2026 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ‘கீர்த்தி சக்ரா’ விருதை வழங்கி கௌரவித்தார்.

பாதுகாப்புப் படை வீரர்கள் உயரிய விருதுகளைப் பெறும் போது அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு வழங்கும் அரசாணையின் அடிப்படையில் இந்த ₹48 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் அமைச்சர் டி. சரத்குமார் மற்றும் ராணுவ வீரரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், முதலமைச்சர் விஜய் குழந்தையை அன்புடன் கொஞ்சும் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago