தமிழை தாறுமாறாக வாசித்ததோடு, நம்பர்ஸையும் தப்பு தப்பாக வாசித்து விட்டார் அமைச்சர் மரிய வில்சன். இது சோசியல் மீடியாக்களில் ஒரு பெரிய விவாதமாகி அவரை வைத்து செய்கிற அளவுக்கு ட்ரோல் வீடியோக்கள் எல்லாம் வெளியாகியது. இந்த நிலைமையில்தான் ஆகஸ்ட் 10ஆம் தேதி கடையநல்லூர் திமுக உறுப்பினர் ராஜேந்திரன் பட்ஜெட் விவாதத்தில் பேசினார். அப்போது அவர் நிதியமைச்சரோட அந்த ஆங்கில புலமையை பாராட்டி அவர் தமிழ் உச்சரிப்பை இன்னும் கொஞ்சம் சரியாக்கிக் கொண்டாக் நல்லா இருக்கும் என ரொம்ப மரியாதையாக ஒரு ஆலோசனையை சொன்னார்.
இதை கேட்டதுமே உடனே கோபத்தோட எழுந்த நிதியமைச்சர் மரிய வில்சன் ”எனக்கு இப்படித்தான் வரும். முடிந்தால் கேளுங்க. உங்களுக்காக என்னை எல்லாம் மாற்றிக் கொள்ள முடியாது. நான் உங்களுக்கு அட்வைஸ் கொடுக்கறேன். நீங்கள் தமிழில் இப்படி பேசுங்க. எனக்கு யூனிக்கா இப்படித்தான் பேச முடியும். அக்செப்ட் பண்ணினால் அக்செப்ட் பண்ணுங்க. நான் உங்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள முடியாது. இது கிறிஸ்தவம் எனக்கு கொடுத்த மொழி. இது தமிழ் படிச்சவங்களுக்கு எல்லாம் புரியாது. என்னை கேலி செய்கிறீர்களா? என ரொம்ப ஆவேசமாக கத்தி மைக்கையும் தட்டி விட்டார்.
உடனே சபாநாயகர், ”அமைச்சர் கோபப்படாதீங்க. இதை கொஞ்சம் கேஷுவலா எடுத்துட்டு போங்க” என சமாதானப்படுத்தினார். மரிய வில்சனோட இந்த அவசர பேச்சை கேட்டு கிறிஸ்தவர்கள் உட்பட பல தரப்பினரும் செம்ம கெடுப்பாகி அவர்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
கிறிஸ்தவத்துக்கும், தமிழுக்கும் ஏதோ முரண்பாடு இருக்கிற மாதிரி மரிய வில்சன் பேசின இந்த கருத்தை முதலமைச்சர் விஜய் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது அரசியல் ரீதியாக தவெகவுக்கு ஒரு மிகப்பெரிய டேமேஜ் உண்டு பண்ணும் என நினைத்து அமைச்சர் மரிய வில்சன் மீது முதலமைச்சர் விஜய் செம்ம கடுப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பட்ஜெட் கூட்டத்தொடர் நடப்பதால் நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்காது என முதலமைச்சர் விஜய் அமைதியாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நிதியமைச்சர் மரிய வில்சன் மீது கண்டிப்பாக இதற்கான ஒரு ஆக்ஷன் இருக்கும் என கோட்டை வட்டாரங்களில் ரொம்ப ஸ்ட்ராங்காகச் சொல்கிறார்கள்.
