சென்னை கலைவாணர் அரங்கத்தில முதலமைச்சர் விஜய் தலைமையில தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் ஏற்பாடாகி இருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரு அவைகளிலும் பிரதிநிதித்துவம் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளுக்கும், அனைத்து எம்பிக்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம் வரைந்திருக்கிறார்.
மொத்தமாக லோக்சபா, ராஜ்யசபா இரண்டு அவைகளையும் சேர்த்தால் தமிழ்நாட்டுக்கு 57 எம்பிக்கள். இந்த கூட்டத்தில 20 எம்பிக்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் பங்கு கொள்ளவில்லை. பங்கேற்ற எம்பிக்கள் என்று பார்த்தால் காங்கிரஸை சேர்ந்த எம்பிக்கள், சிபிஎம் சேர்ந்த எம்பிக்கள், சிபிஐ சேர்ந்த எம்பிக்கள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் மட்டுமே பங்கேற்றிருக்கிறார்கள்.
திமுக, அதிமுக இரு திராவிட பெருங்கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்து இருக்கிறார்கள். பாமகவும் பங்குபெறவில்லை. தேமுதிகவும் பங்கு கொள்ளவில்லை. அதிமுகவுக்கு லோக்சபாவில் பிரதிநிதித்துவம் இல்லை, என்றாலும் ராஜ்யசபாவில் பிரதிநிதித்துவம் இருக்கிறது. ராஜ்யசபா எம்பிக்கள் பங்கு கொள்ளவில்லை.
அதிமுகவை முறையாக அழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டையும் வைத்திருக்கிறார்கள். திராவிட முன்னேற்ற கழகம் வைக்கக்கூடிய வாதம் காவேரி பிரச்சனைக்கு நீங்கள் ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை எனக் கேட்கிறது. ஆனால் இதில் லாஜிக் இல்லை. ஆனால் அதற்கு முன் ஒரே ஒரு விஷயம், மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன்
எம்பி-யும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் ஊரில் இல்லை எனச் சொல்லப்படுகிறது. அது புறக்கணிப்பு என்கிற கணக்கில் வராது. இதில் காவேரி பிரச்சனை பேச வேண்டிய விஷயம்தான்.
ஆனால் நாம் இப்போது தொகுதி வரையறை குறித்தது. இது ஒரு அரசியல் கேம் ஆப் செஸ் என்பது மாதிரிதான் நாம் பார்க்க வேண்டும். இரண்டிலும் அரசியல் கணக்குகள் தான் மேலோங்கி இருக்கிறது. இப்போது காவேரிக்கு கூட்டம் கூட்டுவது போல எதிர்கட்சிகள் சொல்வடு ஏற்புடையதல்ல. திமுக-வில் இருந்து யாருமே வரப்போவது ல்லை. தோழமை கட்சிகள்தான் வருவார்கள் என விஜய்க்கு நல்லாவே தெரியும்.
திமுக, அதிமுக இந்த கூட்டத்தை புறக்கணித்ததில் வியப்பில்லை. ஏனென்றால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறது. திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரை அண்மை காலமாக காங்கிரஸுடன் இணைந்து செயல்படுவதில்லை என்கிற முடிவில் மிக உறுதியாக இருக்கிறது. அதை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் நாள்தோறும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களிலேயே நாம் பார்க்கிறோம்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் முடிந்த சூட்டோடு சர்டிபிகேட் வாங்கிய கையோடு சூப்பர் ஜம்ப் பண்ணியதை திமுக ரசிக்கவில்லை. தங்களை டிச் செய்துவிட்டு அந்த பக்கம் போனதாகத்தான் இன்றுவரை தீராத கோபத்தோடு காங்கிரஸ் கட்சி மீது இருக்கிறது. ஆகவே காங்கிரஸ் கட்சி எடுக்கிற நிலைப்பாடுகளை எல்லாம் நாம் வழிமொழிய வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக கருதுகிறது.
அதேபோல இங்கே காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சி கூட்டத்தை மறுத்த கூட்டத்தை கூட்டுவதற்கு மறுத்த தவெக அரசு விடுக்கிற இந்த அழைப்பை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக கருதுகிறது. அதற்கு இந்த பிரச்சனை குறித்து தவெக கேள்வி எழுப்பிய போது சட்டமன்றத்திலே எதிர்கட்சி தலைவர் மிக தெளிவாக சொல்லிவிட்டார். உங்களுக்கு முன்பாக நாங்கள் இந்த தொகுதி மறைவரை குறைத்து எங்களுடைய ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கிறோம். ஆகவே நீங்கள் வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை திமுக தெரிவித்திருக்கிறது.
தொகுதி மறுவரை விஷயத்தை பொறுத்தவரை திமுகவை சேர்ந்த மிக முக்கிய பொறுப்பில் உள்ளே இருக்கக்கூடிய ஒருவரிடம் நாம் பேசிய போது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால் ”பில் எல்லோரிடமும் அரசு தரப்பு
அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேசி வருகிறது” என்றும் இல்ல சார் அனைத்து கட்சி கூட்டமெல்லாம் கூட்டினார்கள் என்றால், அப்போதும்பிரச்சைனைதான். திமுக தொகுதி மறுவரையில் பிற மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய அதே வாய்ப்பு அதே உரிமை தமிழ்நாட்டுக்கும் இருக்குமானால் திமுக இந்த மசோதாவை ஆதரிப்பார்.
முந்தைய வடிவத்தில் இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். தமிழ்நாட்டுடைய பிரதிநிதித்துவம் குறையாது என்றும் சொல்லியுள்ளார். அன்று எதிர்த்தார்கள் என்றால்அவர்கள் பொறுத்திருந்து பார்த்து உறுதி படுத்த விரும்புகிறார்கள். இந்த மசோதாவை பொறுத்து திமுக எதிர்ப்பு இருக்கும். திமுக இந்த மசோதாவை ஆதரிப்பதற்கான சூழல் உருவானால் நிச்சயமாக ஆதரிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. கண்முடித்தனமாக காங்கிரஸ் கட்சியை போல இருக்கும் என்று கருதவில்லை.
தமிழ்நாட்டினுடைய ஜீவாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சனை. முக்கியமாக இந்த தொகுதி வரையறை இன்னும் வராத மசோதா. அந்த பிரச்சனை முக்கியமா? என்று கேட்டால் காவிரிநீர் பிரச்சனை தான் முக்கியம். காவிரிநீர் பிரச்சனையில் அதனுடைய முக்கியத்துவம் உணர்ந்து மேகதாது அணை கட்டுவதற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இடையூறை உணர்ந்து கர்நாடக அரசு பதற்றத்துடன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மத்திய ஜலசக்தி துறை இணையமைச்சர் அந்த கூட்டத்திலே கலந்து கொள்கிறார். ஆனால் இங்கே இருக்கக்கூடிய ஆளுங்கட்சி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட மறுத்து பிடிவாதமாக இருக்கிறது.
ஆகவே திமுக எழுப்புகிற கேள்வி நியாயமான கேள்வி என்று பார்க்கப்படுகிறது. இது ஒரு முறையாக செய்யப்படாத ஒரு மீட்டிங்தான். ஏதோ ஒரு அவசரமாக அழைப்பதற்கான ஒரு மீட்டிங் மாதிரிதான்
தெரிகிறது.
