https://republictn.com/

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் பங்கேற்றார்.

அவரை வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டும், பேனர்கள் வைக்கப்பட்டும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி நதிக்கரையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைமேடைகள் மற்றும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த இரும்பு தடுப்புகளில் திருக்குறள் மற்றும் தாமிரபரணி நதியின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆனால் அவற்றை மறைக்கும் வகையில் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி நிர்வாகம், நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், தற்போது மாநகராட்சி ஊழியர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தாமிரபரணி நதிக்கரை பகுதியில் இரும்பு தடுப்புகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை நீர் பாய்ச்சி அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago