https://republictn.com/

தமிழகத்தில் ஏற்கனவே ஆறு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மேலும் ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக வெளியாகி இருக்கும் அதிரடித் தகவல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரங்களையும் அதிர வைத்துள்ளது.

இந்தத் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில், தமிழகம் ஒரே நேரத்தில் 15 தொகுதிகளில் மினி சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. திமுகவில் நிலவி வரும் உட்கட்சிக் குழப்பங்கள், எதிர்காலம் குறித்த பயம் காரணமாக, அந்த கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்துப் பதவி விலகி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கு முன்பாகவே இசக்கி சுப்பையா, சத்தியபாமா உள்ளிட்ட நான்கு முக்கிய நிர்வாகிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, அதிமுகவில் அதிருப்தியில் உள்ள மேலும் 7 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தவெக-வில் இணையப் போவதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது பலத்தை வேகமாக இழந்து வருகிறது.

அதிமுகவில் மட்டுமன்றி, திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிலும் சலசலப்புகள் உச்சத்தை எட்டியுள்ளன. கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள், தற்போது அந்த அடையாளத்தில் இருந்து விடுபடத் துடிக்கின்றனர்.

தங்களது கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாப்பதற்காக, மதிமுகவைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டுத் தங்களது சுய பலத்தை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மதிமுகவின் இந்த அதிரடி முடிவு திமுக கூட்டணிக்குள் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஒரே நேரத்தில் 15 தொகுதிகளில் நடைபெற வாய்ப்புள்ள இந்த மினி பொதுத்தேர்தலானது, தமிழக அரசியல் கட்சிகளுக்கு மிக முக்கியமான ஒரு சோதனைக் களம்தான்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் மிகப்பெரிய அரசியல் அக்னிப்பரீட்சை இது. இதில் கிடைக்கும் வெற்றி, இந்த புதிய அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் அளிக்கும் நற்சான்றிதழாகப் பார்க்கப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவிற்கும் தங்களது அரசியல் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்ள இது ஒரு ‘வாழ்வா சாவா’ போராட்டமாகவே அமையப் போகிறது.

ஒரே நேரத்தில் 15 தொகுதிகளுக்குத் தேர்தல் ஜுரம் பரவத் தொடங்கியுள்ளதால், தமிழக அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 weeks ago at 4 weeks ago