Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாலன்: தி பாய்’ (Balan: The Boy) திரைப்படத்தை நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் பாராட்டியுள்ளனர்.

மலையாளத் திரையுலகில் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை வழங்கிய இயக்குநர் சிதம்பரத்தின் மூன்றாவது படைப்பான இந்த திரைப்படம், கடந்த ஜூன் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது.

படத்தைப் பார்த்த பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, “‘பாலன்’ திரைப்படத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை; அதன் தாக்கம் என்னுள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படம் மலையாள சினிமாவின் மற்றுமொரு அற்புதமான படைப்பு என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ போன்ற மிகப்பெரிய வணிக வெற்றிக்குப் பிறகு, இவ்வளவு அழுத்தமான மற்றும் உணர்வுபூர்வமான கதையைத் தேர்ந்தெடுத்து திரைப்படமாக உருவாக்கிய இயக்குநர் சிதம்பரத்திற்கும் அவரது குழுவினருக்கும் சூர்யா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

படத்தின் நடிப்பு, திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் மற்றும் ஒலியமைப்பு உள்ளிட்ட ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் சர்வதேச தரத்தில் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்க  'கருப்பு' பட விமர்சனம்.. கடவுள் மேஜிக் பலித்ததா..? சூர்யா-ஆர்.ஜே.பாலாஜி டீம் ஜெயித்ததா..?

அறிமுக முகங்களான ஆதிசேஷன், ஃபர்ஹானா பலத்திங்கல் மற்றும் முகம்மது ஜினான் ஆகியோரின் எதார்த்தமான நடிப்பைக் கண்டு வியந்த சூர்யா, “இவர்களின் நடிப்பைப் பார்க்கும்போது, எனது நடிப்புத் திறனையும் இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ‘அப்பாஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் டொவினோ தாமஸின் நடிப்பையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் கதையை ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேசம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் எழுதியுள்ளார்.

குறிப்பாக, நடிகர் சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும், தற்காலிகமாக ‘சூர்யா 47’ என அழைக்கப்படும் திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ‘பாலன்: தி பாய்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago