Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Republic Tamil

தமிழ்நாட்டில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறக்கும் சூழலில், பொதுமக்கள் சுப காரியங்கள் மற்றும் சொத்து பத்திரப்பதிவு பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்குவது வழக்கம். இந்த நிலையைப் பயன்படுத்தி, தமிழக அரசு பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் ரியல் எஸ்டேட் துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

ஆவணி பிறந்ததும் மக்களுக்கு பெரிய சிக்கல் வரப்போகிறது. இன்றோடு ஆடி மாசம் முடியப்போகிறது. அதற்கு பிறகு ஆவணி பிறக்கிறது.

ஆடி மாதத்தில் பெரும்பாலும் இந்துக்கள் எந்த முகூர்த்தமோ, பத்திரப்பதிவோ செய்ய மாட்டார்கள். ஆவணி பிறந்ததும் ஒரு நல்ல காரியங்களை செய்வதற்கு ரொம்ப தீவிரமாக இறங்கிவிடுவார்கள். இதை துல்லியமா கணித்த் தமிழக வெற்றிக் கழக அரசு சத்தமில்லாமல் பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருக்கிறது. ஏற்கனவே வருவாயை பெருக்குவதற்கான வழிகளை ஆராய்வதற்காக தமிழக அரசின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக பிரபல பொருளாதார நிபுணரும், இந்திய திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவருமான மான்டெக் சிங் அலுவாலியா தலைமையில முதலமைச்சர் விஜய் ஒரு குழுவை அமைத்திருக்கிறார்.

இதையும் படியுங்க  கனவில் கூட நினைக்காத மாற்றம்..! லஞ்சம் கேட்டா என் கதவைத் தட்டுங்க..! புரோக்கர்களை அலறவிட்ட தவெக அமைச்சர்..!

அந்த பரிந்துரையின்படியோ அல்லது நிதித்துறை அதிகாரிகளின் திட்டத்தின் படியோ விரைவில் பத்திரப்பதிவு கட்டணம் கணிசமாக உயரப்போகிறது என்கிறார்கள். தவெக ஆட்சி அமைந்த பிறகு தற்போது ரியல் எஸ்டேட் கொஞ்சம் உயர ஆரம்பித்து இருக்கிறது. அப்ரூவல் வாங்குவதற்கு முன் உள்ள அந்த திமுக அரசு மாதிரி இப்போது லஞ்சம் கேட்கப்படாததனால் ரியல் எஸ்டேட் பிசினஸ் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதுஇ திடீரென பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தினால் ரியல் எஸ்டேட் தொழிலும் படுத்டுவிடும் என தொழிலதிபர்கள் எல்லாம் இப்போது அலர ஆரம்பித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளே சேர்ந்து இந்த சொத்து வரியை 300% வரைக்கும் உயர்த்தி விட்டார்கள் என மேயர் பிரியாவே குற்றம் சாட்டி இருந்தார். அதே மாதிரி இங்கேயும் அதிகாரிகளே சேர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்துவதற்கு தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago