Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Velumani

ஒருபுறம், “பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும்” என்று அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்.பி. வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் விட்ட ‘கூட்டறிக்கை வெடி’ இன்னும் ஓயாத சூழலில்… மறுபுறம், டெல்லி மேலிடத்து ‘சாணக்கியர்’ அமித் ஷாவின் 15 நிமிடத் தனிப்படை எச்சரிக்கை, எடப்பாடி பழனிசாமியைத் தீவிர யோசனையில் தள்ளியிருக்கிறது.

ஆனால், அதிமுகவுக்குள் இந்த உட்கட்சிப் பூசலும் குழப்பமும் ஓடிக் கொண்டிருக்கும்போதே, யாருமே எதிர்பாராத கோணத்தில் இருந்து பாய்ந்து வந்திருக்கிறது ‘தமிழக வெற்றி கழகத்தின்’ அதிரடி ஆபரேஷன்!
சில தினங்களுக்கு முன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணியும், நத்தம் விஸ்வநாதனும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள். கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் வைத்த
அந்த கோரிக்கை அதிமுக வட்டாரத்தில ஒரு பெரிய அலையை கிளப்பி இருந்தது.

சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தும், எஸ்.பி.வேலுமணியும் சந்தித்து பேசிய சில நாட்களுக்குள் தான் இந்த கூட்டறிக்கையை வெளியாகியது. அதாவது அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு தனி பிரிவை உருவாக்கி, அதை சட்டமன்றத்தில் அங்கீகரித்து அதற்கு போட்டி அதிமுக என பெயர் சூட்டுவதுதான் தமிழக வெற்றி கழகத்தோட இப்போதைய ஆபரேஷன்.

இதையும் படியுங்க  “அதிமுகவில் இருந்து வெளியேறிய விஜயபாஸ்கர் – விஜய் கட்சியில் புதிய அத்தியாயம்!”

இதற்கு எஸ்.பி.வேலுமணியும் ஓகே சொல்லித்தான் இந்த நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக படிப்படியாக நகர்த்திட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு இடையில் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர்
அமித் ஷாவை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏர்போர்ட்டில் சந்தித்து கிட்டத்தட்ட 15 நிமிஷங்கள் வரை தனியாகப் பேசி இருக்கிறார்.

அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என தேர்தலுக்கு முன்னாடியே தான் சொன்னதை நினைவுபடுத்தி எடப்பாடி பழனிசாமியிடம் தனது அதிருப்தியை அமித் ஷா வெளிப்படுத்தி இருக்கிறார்.
அமித் ஷாவுடைய இந்த சந்திப்புக்கு பிறகுதான் கட்சியை விட்டு சென்றவர்களை மறுபடியும் சேர்க்கலாமா? என எடப்பாடி பழனிசாமி தீவிர யோசனையில் இறங்கி இருகிறார் என அதிமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

ஆனால், அதற்குள் எஸ்.பி. வேலுமணி தலைமையில கணிசமான அதிமுக எம்எல்ஏக்களை தனியாகப் பிரித்து ஒரு போட்டி அதிமுகவை உருவாக்குவதில் தவெக தரப்பு மிகத் தீவிரமாக களம் இறங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago