Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Vijay

பெண்களுக்கு இலவச பேருந்து என்ற அரசின் அறிவிப்பு ஒருபுறம் கொண்டாட்டமாக இருக்க, மறுபுறம் லட்சக்கணக்கான ஆட்டோ மற்றும் தனியார் பேருந்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் பேரிடியாக விழுந்துள்ளது

.தமிழக அரசு கடந்த காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2, 2026) அன்று மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை சாதாரண கட்டண பேருந்துகளிலும் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தியது. ஒருபக்கம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் மறுபக்கம் உழைக்கும் குடும்பங்களை தெருவுக்கு கொண்டு வந்துள்ளதாக ஆட்டோ, பஸ் ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.”

எங்க வண்டியில் ஏறுறதுக்கு ஆளே இல்லைங்க…” என்று வெறிச்சோடி கிடக்கும் தங்கள் ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகளை வீடியோவாக பதிவு செய்து பலரும் கண்ணீரோடு சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது அந்த வகையில்,

திருப்பத்தூர் பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர் “ரஜினி தட்சணாமூர்த்தி’ தனது ஆதங்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தினார் “திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம், ஹவுசிங் போர்டு, குனிச்சி, கந்திலி, குரிசிலாப்பட்டு போன்ற பகுதிகளுக்கு பெண்கள் எங்கள் ஆட்டோக்களைத்தான் பெரிதும் நம்பியிருந்தார்கள். காய்கறிச் சந்தை, மருத்துவமனை, பள்ளிகளுக்கு செல்ல ஆட்டோ தான் ஆதாரமாக இருந்தது. ஆனால் இப்போது, அந்த வழித்தடத்தில் செல்லும் தொலைதூர சாதாரண கட்டண பேருந்துகளும் இலவசம் என்பதால், பெண்கள் எல்லோரும் பஸ் ஸ்டாப்பிலேயே மணிக்கணக்கில் காத்திருந்து சென்று விடுகிறார்கள்.

இதையும் படியுங்க  I’ve come throughout individuals asking for assist eager to

கடந்த ஆட்சியில் நகரப் பேருந்து இலவசத்தால் பாதி வருமானம் போனது. இந்த ஆட்சியில் மப்சல் பஸ்களிலும் இலவசம் ஆனதால் மீதி இருந்த வருமானமும் போய்விட்டது. ஏற்கனவே ஆன்லைன் App டாக்சிகளின் போட்டியாலும் , CNG மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் திணறிக் கொண்டிருக்கிறோம். இதனால் 70% சவாரி குறைந்து விட்டது” என்றார் குமுறலுடன்.

மீட்டர் ஓடவில்லை; வீட்டு அடுப்பு எரியவில்லை! “முன்பெல்லாம் ஸ்டாண்டில் இருந்து பக்கத்து தெருவுக்கு போகக் கூட பெண்கள் எங்களைத்தான் அழைப்பார்கள். நாள் ஒன்றுக்கு 700, 800 ரூபாய் வரை கிடைக்கும் .இன்று நிலைமை தலைகீழ். பஸ் ஸ்டாண்டில் மணிக்கணக்காக நின்றாலும் ஒரு சவாரி கூட கிடைப்பதில்லை. ‘அண்ணே பஸ் சும்மா தானே போகுது, நாங்க பஸ்ல போய்க்கிறோம்’ என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள்.

இது அவர்கள் தவறு இல்லை எங்கள் ஆட்டோவின் மீட்டர் ஓடாமல், எங்கள் வீட்டு அடுப்பு எரியவில்லை. நாள் முழுக்க நின்றாலும் 100, 200 ரூபாய் கூட கிடைக்காத நாட்கள் உண்டு. பெட்ரோல், டியூ, வீட்டு வாடகை என எல்லாம் ஏறிவிட்டது. வருமானம் மட்டும் குறைந்துவிட்டது.

இதையும் படியுங்க  வதந்திகளுக்கு சாட்டையடி! விஜய்யுடன் திரிஷா பகிர்ந்த 'அந்த' புகைப்படம்: இணையத்தில் வைரல்..

பல மாதமாக டியூ கட்ட முடியவில்லை. பைனான்ஸ்காரன் வீட்டு வாசலில் வந்து நிற்கிறான். பிள்ளையின் ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் தவிக்கிறேன். இரவு 11 மணி வரை தனியாக வரும் பெண்களை பாதுகாப்பாக வீட்டில் கொண்டுபோய் விட்ட எங்களை இன்று யாரும் கண்டுகொள்ளவில்லை” என்கிறார் கண்கலங்கியவாறு

ஓட்டுநர்களின் கோரிக்கை என்ன?ஓட்டுநர்கள் இலவச திட்டத்தை நிறுத்தச் சொல்லவில்லை. மாறாக அரசுக்கு அவர்கள் வைக்கும் கோரிக்கை இதுதான்:” எங்களைப் போன்ற ஏழை ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமையுங்கள், மாத மானியமோ, பெட்ரோல் மானியமோ, அல்லது இரவு நேரங்களில் பெண்களுக்கான பகிர்வு கட்டண திட்டத்தையோ கொண்டு வந்து எங்கள் வயிற்றிலும் பால் வாருங்கள் இது என் ஒருவனின் கண்ணீர் அல்ல, தமிழகம் முழுவதும் தவிக்கும் லட்சக்கணக்கான ஆட்டோ குடும்பங்களின் கண்ணீர்”

அதேபோல் தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசு பேருந்துகளுக்கு வழங்கும் மானியம் போல் தங்களையும் இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும், மினி பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதித்து அதற்கான தொகையை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். பேருந்து ஓட்டுநர்களும்

இதையும் படியுங்க  Additionally, reproduction producers use superior

வெற்றிப் பயணம்’ பெண்களுக்கு வெற்றிதான். ஆனால் அது லட்சக்கணக்கான ஓட்டுநர் குடும்பங்களின் வாழ்க்கைப் பயணத்தை வெறுமையாக்கி விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago