Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Stalin Modi

”தற்போது யார் துரோகி என்பது பாஜக எதிர்ப்பில் உறுதிபாடுள்ள அனைவருக்கும் வெள்ளிடை மலையாக விளங்கிவிட்டது” என தொகுதி வரையறௌஇ மசோதா விவகாரத்தில் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவரது முகநூல் பதிவில்.”நடப்பதெல்லாம் நன்மைக்கே! ஒரு நெருக்கடியான சூழல் வரும் போது தான் நண்பன் யார்? துரோகி யார்? எனத் தெரிய வரும். தொகுதி மறுவரையில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்தால் அது பல வகைகளில் தமிழ்நாட்டிற்கு பின்னடைவைத் தரும்.

ஜனநாயகத்தில் எண்ணிக்கை பலமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது எனும்போது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதை தக்க வைப்பதில் தான் தமிழ்நாட்டின் தற்காப்பு உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 12 எம்.பிக்கள், விசிக 2 எம்.பிகள், சிபிஐயின் 2 எம்.பிக்கள், சிபிஎம்மின் 2 எம்.பிக்கள், மதிமுக மற்றும் முஸ்லிம் லீக்கின் தலா ஒரு எம்.பி என மொத்தம் 20 எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுக, அதிமுக, தேமுதிக, பாமக, மநீம கட்சிகளின் மொத்தம் 37 எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர். அதிமுக, தேமுதிக, பாமக இந்த கூட்டத்தை புறக்கணிப்பது ஆச்சரியமல்ல. ஏனென்றால், அவர்கள் பாஜகவிற்கு கட்டுப்பட்டவர்கள். தொகுதி மறுவரையறைக்கு மறு பேச்சில்லாமல் மண்டை ஆட்டுபவர்கள் என ஏற்கனவே அறியப்பட்டவர்கள். பாஜகவுக்கு ஆதரவானவர்கள் எடுக்கும் நிலைபாட்டையே திமுகவும் எடுக்கிறது என்பது கவனத்திற்கு உரியது.

இதையும் படியுங்க  "திமுகவின் பாதையில் தவெக? 'வரலாற்றுத் துரோகம்' என அன்புமணி ராமதாஸ் சாடுவது ஏன்?"

மத்திய பாஜக அரசு அமல்படுத்தவுள்ள தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து முதல்வர் விஜய் கலைவாணர் அரங்கில் கூட்டிய தமிழக எம்.பிக்களின் கலந்தாய்வு நிகழ்வில் பங்கெடுப்பதில் திமுகவுக்கு என்ன தான் பிரச்சினை?

இந்த அனைத்து எம்.பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தற்கு திமுக சொல்லும் காரணம் ஏற்புடையதா? தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றப் போவதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லையாம்.

திருத்தப்பட்ட சட்ட முன்வடிவு குறித்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில் – அது இன்னும் கையில் கிடைக்கப் பெறாத நிலையில், இதில் விவாதிக்க எதுவும் இல்லையாம். அப்படியானால், அன்றே நீங்கள் தொகுதி மறுவரையறை கூடவே கூடாது என ஆவேசமாக முழங்கியது ஏன்? அன்றும் இதே நிலை தானே இருந்தது.

இங்கு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் – இந்தியாவில் யாருமே இதை பொருட்படுத்தாமல் விவரமான தகவல் வரட்டும் பார்க்கலாம் என காத்திருந்த போது திமுக மட்டும் முந்திரிக் கொட்டையாக, ”ஆகா, விட்டேனா பார்?” என முழங்கியது ஏன்?

இதையும் படியுங்க  பக்காவாக கட்டம் கட்டும் திமுக..! வாண்டடாக சிக்கும் தவெக..! விஜய் தலையில் 'கட்டுமரம்' ஏற்றும் அறிவாலயம்..!

இன்றைக்கும் அதே நிலைபாட்டை இந்தக் கூட்டத்தில் திமுக எம்.பிகள் எடுத்து வைத்து, ”தாங்கள் அதே நிலைபாட்டில் தான் உள்ளோம். அதில் மாற்றமில்லை” என தமிழகத்தின் ஒற்றுமையை ஒன்றிய அரசுக்கு உணர்த்த என்ன தயக்கம்?
சமீபத்திய நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோரும் ”எந்தத் தகவலும் சரியாக இல்லாத போது இதில் எப்படி நாங்கள் முடிவெடுப்பது?” என்றனர். ஏன் இந்த பின்னடைவு? யாரை திருப்திபடுத்த திமுக எம்.பிக்களின் குரலின் ஸ்ருதி குறைந்தது.

சமீபத்தில் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொகுதி மறுவரையறை திட்டம் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் பாஜகவின் சதி என்றும், இந்த மறுவரையறையை ஆதரிப்பவர்கள் 21-ஆம் நூற்றாண்டின் ‘எட்டப்பர்கள்’ என்றும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு துரோகம் செய்பவர்கள் என்றும் ஆகவே ஒவ்வொரு தமிழ் நாட்டு கட்சியும், தேசிய கட்சியும் தொகுதிமறுவரையறை மசோதாவை கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டும் என்று பேசினார்.

உடனே திமுக எம்.பி தயாநிதிமாறனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது? ஏன்? குற்றமுள்ள மனசு குறுகுறுக்கிறதா? அப்படியானால் அன்று நீங்கள் பாஜகவை எதிர்த்து பேசிய பேச்சுக்களும், நடத்திய கூட்டங்களும் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை அறுவடை செய்யும் ஒற்றை நோக்கத்திற்கு தானா? அன்று பாசாங்கு அரசியல் செய்தவர்கள் இன்று பம்பி கிடக்கிறார்கள் எனலாமா? ”ராஜா, கண்ணு நீ எங்களை எதிர்த்து அடிச்சு என்ன வேணா கேம் ஆடிக்கோ. ஆனா, காரியம் என்று வரும் போது எங்களுக்கு கை கொடுக்க வேண்டும் புரிகிறதா?” என்று பாஜக தலைமையின் கட்டளைக்கு ஏற்ப மறைமுக டீலீங் போட்டுக் கொண்டீர்களா?

இதையும் படியுங்க  உதயநிதி பங்களாவைக் கேட்கும் ஆதவ் அர்ஜுனா… கோட்டையில் அரங்கேறும் மல்லுக்கட்டு!
Republic Tamil

காங்கிரசும், இடதுசாரிகளும், விசிகவும், முஸ்லீம் லீக்கும் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக அரசை ஆதரிக்கும் நிலை எடுத்த போது யாருக்குமே திமுக மீது விரோதமோ,பகைமையோ துளியும் கிடையாது. சந்தர்ப்ப சூழல் கருதி –தமிழ்நாட்டின் நலன் கருதி – தான் எடுத்தனர். ஆனால், அதையே சாக்காக வைத்து பகைத் தீயை வளர்த்தீர்கள், இந்தியா கூட்டணியில் இருந்தே விலகினீர்கள். கூட்டாளிகளாக இருந்த நட்பு சக்திகளை வலிந்து ”துரோகி” என முத்திரை குத்தினீர்கள்! ஆனால், தற்போது யார் துரோகி என்பது பாஜக எதிர்ப்பில் உறுதிபாடுள்ள அனைவருக்கும் வெள்ளிடை மலையாக விளங்கிவிட்டது;; என விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 days ago at 6 days ago