விஜய் தலைமையிலான அரசை கவிழ்க்க திமுகவினர் குதிரை பேரம் நடத்துவதாக தவெக உத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா அளித்த புகார் ஏற்படுத்திய பரபரப்பை விட அக்கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் அவசர குடுக்கைகள் போன்று வாயை விட்டு திமுக-வினரிடம் வசமாக சிக்கி வருவதுதான் அரசியல் அதகளம். வழக்குகளால் வளைத்து போட்டு கட்டம் கட்ட வேண்டும் என்பதுதான் திமுகவின் கணக்காக உள்ள நிலையில் அதற்கு ஏற்றார் போல வைகோ, எம்.ஆர்.விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் குதிரை பேரம் நடத்தியது உண்மைதான் என்பது போல பேசியுள்ளது. தவெகவுக்கே ரிஸ்க்கை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஜோசப் விஜய் எனும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக தவெக ஆட்சி அமைந்த 64 நாட்களுக்கு உள்ளேயே திமுக முன்னாள் அமைச்சர்கள் வரிசையாக வழக்குகளில் சிக்கி கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இன்னும் யார் யாரெல்லாம் சிக்க போகிறார்களோ? எந்தெந்த குட்டெல்லாம் வெளியில் வரப்போகிறதோ என அரசியல் வட்டாரம் ஒருபுறம் முணுமுணுத்து கொண்டிருக்க சைலன்டாக சட்டம் வாயிலாக தவெகவை லாக் செய்யும் வேளையில் திமுகவும் மிக கவனமாக காய்நகர்த்தி கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில் திமுக எதிர்கட்சி நாற்காலிக்கு மாறியது. அந்த நாற்காலியில் இருந்து கொண்டே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அஜெண்டாவையும் தவெகவிற்கு குடச்சல்
கொடுக்கும் அரசியல் புரளி வேலையையும் திமுக கட்சிதமாக செய்து வருகிறது. ஆளும் அரசுக்கு தேவையான மேஜிக் நம்பரான 118 இல்லாத நிலையில் அதிமுகவிலிருந்து பலர் விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர்.
இது சாதாரணமாக நடக்கவில்லை. தவெகவினர் நடத்தும் குதிரை பேரத்தால் தான் நடக்கிறது. அதற்கு பச்சோந்தி போல் கட்சி விட்டு கட்சி தாவும் முக்கிய புள்ளிகளின் துடுக்கு பேச்சே முக்கிய ஆதாரம் என கூறி திமுகவினர் தொடர்ந்து மனு கொடுத்து
வருகின்றனர். மதிமுக உறுப்பினர்கள் இரண்டு பேர் ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். தானே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைப்பேன் என முதலமைச்சர் விஜய் கூறியதாக வாயை விட்டார் வைகோ. இது போதாதா?

முதலமைச்சரே குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார். அவர்தான் முதல் குற்றவாளி என திமுகவினர் ஆளுனரிடம் புகார் அளித்தனர். அதேபோல் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக சாட்சியங்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும் அவர் மீது தனி வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிபிஐயி இடம் புகார் மனு அழித்திருந்தார்.
அதேபோல் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணனை தவெகவில் சேருமாறு 5 மணி நேரம் அணைத்து வைத்து வற்புறுத்தியதாகவும் புகார் அளித்திருந்தனர். அதுமட்டுமல்லாது திமுக துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டினிடம் எந்த துறை அமைச்சர் பதவியை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருப்பதாகவும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நில்லுங்கள். தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்வார் என ஆசை காண்பித்ததாகவும் குற்றம் சாட்டி இருந்தனர்.
அத்தோடு வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசனை தொடர்பு கொண்டு 50 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி தவெகவில் இணைய அழைத்ததாகவும் புகார் அளித்தனர். மொத்தத்தில் தவெக ஆள் பிடிக்கும் வேலையில் தான் இறங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை என புகாருக்கு மேல் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த பின் மகாபலிபுரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடியோவை சுட்டிக்காட்டி மீண்டும் புகார் அளித்துள்ளனர் திமுகவினர். நாங்கள் பதவிக்கு ஆசைப்பட்டெல்லாம் வரவில்லை தவெகவினர் தங்களை அணுகினார்கள் அதனால்தான் வந்தோம் என கட்டுச்சோற்றை கூட்டத்திலேயே அவிழ்த்தார். இந்த வீடியோவை ஜூம் செய்து லூப்பில் போட்டு காட்டிய திமுகவினர் இதைவிட வேறெஎன்ன என்ன ஆதாரம் வேண்டும்? ஆளுனர் ஏன் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டும்? அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் அழுத்தம் கொடுப்பது யார்? என கேள்விகளால் குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை. எனது பேச்சே தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என எம்.ஆர்.விஜயபாஸ்கர் அந்தர் பல்டி அடித்திருப்பது தனிக்கதை. அதேபோல் தமிழ்நாட்டின் சட்டமன்ற பிரச்னை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் நடைபெற்ற ஊழல் என அதையும் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள். இப்படி சட்டமன்றத்திலும் சரி மக்கள், மன்றத்திலும் சரி தவெகவின் தவறுகளை வட்டம் போட்டு காட்டும் திமுகவினர் வழக்குகளால் வளைக்கும் பணிகளிலும் தொய்வு காட்டவில்லை.

சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பது போல சின்ன சின்ன தவறுகளையும் அசால்ட்டாக விடாமல் பூக்கட்டுவது போல புகார் மனுவை கோர்த்து கொண்டிருக்கின்றனர் திமுகவினர். மாலை போன்று புகாரும் நீருமாக சேர்ந்தால் அது ஆளும் தவெகவிற்குதான் நீளும் நெருக்கடிக்கு ஆளாக்கும். அதுதான் திமுகவின் கணக்குமே. ஆனால் எதிர்கட்சியின் புகார்களை தவெகவினர் தலையில் ஏற்றி கொள்ளவில்லை என்பது அரசியல் கள நிலவரத்தை பார்த்தாலே தெரிகிறது. ஆனாலும் தற்போதைக்கு அதுதான் திமுகவின் பிளஸ் பாயிண்டும் கூட. வரும் இடைத்தேர்தலுக்கு உள்ளேயே பல வழக்குகள் மூலம் தவெக மீது முடிந்தவரை சேற்றை வாரி இறைத்து தனக்கான வெற்றி அறுவடையாக மாற்றும் நோக்கில் திமுக நேர்கோட்டில் சென்று கொண்டிருக்கிறது.
அதேபோல் அவசரப்பட்டு தவெகவிற்கு வாக்களித்து விட்டோமோ என நாடாளுமன்ற தேர்தலுக்குள் மக்களே என்னும் அளவிற்கு மடை மாற்றம் செய்வதும் திமுகவின் திட்டம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆக சிறு சிறு வழக்குகளையும் தூசி போல் ஈசியாக எடுத்துக் கொள்வது தவெகவிற்கு தான் ரிஸ்க். அதைப்போல் பழுத்த அரசியல்வாதிகளான திமுகவினரின் வழக்குகளுடனேயே தவெக போராடிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.
