Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி இருக்கிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மொத்தமாக இரண்டு அவைகளையும் சேர்த்து தமிழ்நாட்டோட எம்.பி.,க்கள் 57. இதில்
19 எம்பிக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். 36 பேர் புறக்கணித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த தொகுதி வரையறை மசோதா பற்றிய விவாதம் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஓராண்டுக்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த மசோதா எப்போது வந்தாலும் யாருடைய ஆதரவு இல்லாமல் நிறைவேற முடியாது. அமைச்சர் கிரண் ரிஜிஜூ, எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். ஆனால் அப்போதும் ராகுல் காந்தி காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. நாங்க தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற விட மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே அரசை பொறுத்தவரை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடைய
ஒத்துழைப்பு இன்னும் கிடைக்காததால் அந்த மசோதாவை எப்போது கொண்டு வருவது என்பதில் அவர்களுக்கு சில தயக்கங்கள் உள்ளன.

காங்கிரஸ் எதிர்க்கதான் செய்வார்கள். இது ஒரு சூப்பர் மெஜாரிட்டி தேவைப்படக்கூடிய அதாவது ஒரு கான்ஸ்டிடியூஷனல் அமெண்ட்மென்ட் மசோதா. இதற்கு ஒரு சிம்பிள் மெஜாரிட்டி தேவையில்லை. ஒரு சூப்பர் மெஜாரிட்டி தேவை. நிச்சயமாக இது அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா என்பதால் இதை நிறைவேற்றுவதற்கு மொத்தம் இருக்கக்கூடிய உறுப்பினர் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுடைய ஆதரவு தேவை. மொத்தம் இருக்கிறது என்று சொல்லும்போது அப்போது இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அவையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதில் மூன்று இரண்டு பங்கு அது வந்து சூப்பர் மெஜாரிட்டி என்று சொல்வார்கள்.

இதையும் படியுங்க  விஜய்யின் ‘டெல்லி டூர்’..! மோடிக்குக் காத்திருக்கும் டிமாண்ட்ஸ்!

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி இந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது இந்த மசோதாவுக்கு ஆதரவாக மத்திய அரசுக்கு
கிடைத்த மொத்த வாக்குகள் 298. எதிராக கிடைத்த வாக்கு என்பது 230. அன்று இருந்த அந்த உறுப்பினர்களுடைய
எண்ணிக்கைப்படி மொத்தம் 360 உறுப்பினர்களுடைய ஆதரவு இருந்திருந்தால் இந்த மசோதா அன்றைக்கே நிறைவேறி இருக்கும். ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறி இருக்கிறது.

இப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்ற கட்சிகள் எல்லாம் உடைத்து விட்டு வந்திருக்கிறார்கள். ஆகையால் இப்போது அந்த நம்பரை சேர்த்தால் திமுகவை கழித்தால் திமுகவை சேர்க்காமல் பாஜகவுக்கு சூப்பர் மெஜாரிட்டி கிடைக்குமா? இல்லை, இந்த அரசியல் சூழலை மாறியதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இப்போது மத்திய அரசு இருக்கக்கூடிய மொத்த உறுப்பினருடைய ஆதரவு 323லிருந்து 326 வரைதான் ஆதரவு இருக்கிறது.

அதாவது திரிணாமும் காங்கிரஸில் இருந்து உடைத்து வந்த 20 எம்பிக்கள் அதேபோல உத்தவ் சிவசேனா கட்சியிலிருந்து வந்த ஏழு எம்பிக்கள் இவர்கள் எல்லாரையும் சேர்த்தாலே மத்திய அரசுக்கு 323 எம்பிக்களுடைய ஆதரவுதான் தற்போது இருக்கிறது. ஆனால் தேவை 62. ஒருவேளை யாராவது கட்சிகள் பங்கேற்கவில்லை அல்லது யாராவது உறுப்பினர்கள் வரவில்லை, எந்த ஒரு கட்சியாவது வெளிநடப்பு செய்கிறார்கள் என்ற ஒரு சூழ்நிலை வரும்போது அப்போது எண்ணிக்கை கீழ் சில மாற்றங்கள் இருக்கலாம்.

ஒரு ஐந்துலிருந்து 10 எண்ணிக்கை குறைந்தால் ஒரு 350, 355 என்ற எண்ணிக்கை இருந்தாலே மசோதாவை நிறைவேற்ற முடியும். திமுகவுக்கு 22 எம்.பி.,க்கள் உள்ளனர். இப்போது திமுகவின் நம்பர் சேர்ந்தால் ஒருவேளை பாஜகவின் இந்த பில் நிறைவேறிடுமா? நிச்சயமாக நிறைவேறிடும். ஏனென்றால் இந்த எந்த கட்சியும் சாராத, எந்த கூட்டணியும் சேராத சில கட்சிகள் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதேபோல ஒடிசாவில் பிஜு ஜனதாதள் இன்னும் சில சுயேச்சை எம்பிகள் வெற்றி பெற்றிருக்கக்கூடிய எம்பிக்களே இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  அதிமுகவில் பரபரப்பு… மீண்டும் எடப்பாடி நெஞ்ச்சில் கடப்பாறையை இறக்கிய எஸ்.பி.வேலுமணி

அதேபோல பஞ்சாபில் சிரோன்மணி அகளிதளம் போன்ற சில சிறிய எண்ணிக்கையில் எம்பிக்களை வைத்திருக்கக்கூடிய கட்சிகள் இருக்கின்றன. அவர்களுடைய ஆதரவு பிளஸ் திமுகவுடைய 20 எம்பிகளுடைய ஆதரவு இருந்தால் நிச்சயமாக இந்த மசோதா நிறைவேறும். திமுக வெளிநடப்பு செய்தால் அந்த எண்ணிக்கை குறையும். அதாவது மத்திய அரசுக்கு 360 என்கிற ஒரு சூழ்நிலை என்று இல்லாமல் 340 அல்லது 345 என்ற எண்ணிக்கை இருந்தாலே அவர்களால் மசோதாவை நிறைவேற்ற முடியும். எனவே திமுக வெளிநடப்பு செய்கின்ற போது அந்த மசோதாவை நிறைவேற்ற தேவையான எண்ணிக்கையும் குறைவும்.

”நியாயமான எந்த ஒரு மாநிலமும் பாதிக்கப்படாமல், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் எங்களுடைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாமல் உயர்த்தப்பட்டால் நாங்கள் அது குறித்து பரிசீலிப்போம் என்கிற விஷயத்தையும் திமுக கூறியிருக்கிறது. தமிழகத்திற்கு பாதகமாக இல்லை என்றால் நாங்கள் ஏன் அதனை எதிர்க்க போகிறோம் என்று அவர் வெளிப்படையாகவே திமுக கூறி இருக்கிறது.

கடந்த முறை இந்த மசோதாவை அவர்கள் மக்களவையில் மட்டும்தான் கொண்டு வந்தார்கள் மாநில வகையில் கொண்டு வரவில்லை. மக்களவையில் தோற்ற உடனேயே நாங்கள் இந்த மசோதாவை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று அரசு அறிவித்து விட்டார்கள். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அரசுக்கு மக்களவைதான் சிக்கலாக இருக்கிறதே தவிர மாநிலங்களில் அந்த அளவுக்கு சிக்கல் அவர்களுக்கு இல்லை. இப்போது போன முறை இந்த மசோதாவை கொண்டு வந்து
தோற்கடிக்கப்பட்டு திரும்ப பெற்றார்கள். இப்போது அதிலிருந்து மாற்றங்களை செய்து கொண்டு வருவதற்கு திட்டம் போட்டு இருக்கிறார்கள்.

இதையும் படியுங்க  சிக்கிய சின்னவர்..! உதயநிதியை திருப்பியடித்த சனாதன பூமராங்..! தவெக ஸ்மார்ட் மூவ்..!

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டுக்குள் தற்போது 39 இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு 60 மக்களவை இடங்கள் கிடைக்கும் என்று சொல்லியிருந்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படுகின்ற போது ஒரு சிக்கல் வந்து இருந்தது. வேண்டுமென்றால் உங்களுக்கு எழுத்து பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். சிறுநேரம் அவையை ஒத்தி வையுங்கள். நான் நேராக சென்று இதில் மாற்றங்களை செய்து எழுத்துப்பூர்வமாகவே மசோதாவில் இதனை கொண்டுவர செய்கிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

எனவே ஒருவேளை இந்த முறை திமுக ஒருவேளை ஆதரவளிக்க வேண்டும் என்றால் மசோதா கொண்டுவரப்படும் போதே அவர்கள் சொன்ன அந்த உத்தரவாதத்தை அதில் மசோதாவிலேயே சேர்க்க ஒரு வேளையை ஒப்புக்கொண்டால் திமுக ஆதரவளிக்க ஒருவேளை வாய்ப்பு உண்டு. ஏப்ரல் 16லிருந்து 19ஆம் தேதி முறை சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. இந்த முறையும் அதே போன்ற ஒரு பேச்சு அடிபட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 days ago at 5 days ago