முதலமைச்சர் விஜய் -அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு கடந்த ஜூன் 15ஆம் தேதி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில விசாரணைக்கு வந்தபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது வழக்கு தொடுத்த சங்கீதா, முதல்வர் விஜய் இருவரும் நேரில் ஆஜராகவில்லை.
இருவர் சார்பாவும் ஆஜரான வழக்கறிஞர்கள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக ஆஜராவதற்கு கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிபதி அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என அந்த கோரிக்கைக்கு மறுத்து விட்டனர். வழக்கை ஆகஸ்ட்ஏழாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்த நிலைமையில் தான் பிரிஞ்சிருக்கிற முதலமைச்சர் விஜயும், அவரது மனைவி சங்கீதாவையும் சமரசம் பேசி சேர்த்து வைக்க ஒரு பிரபல தொழிலதிபர் களத்தில் இறங்கி இருக்கிறார் என ஏற்கெனவ ஜூன் 16 ஆம் தேதி அன்று நமது ரிபப்ளிக் தமிழ் நாட்டில் ஒரு செய்தி வெளியிட்டுருந்தோம்.

அதாவது திருவேணி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் பெரிய அதிபரான கார்த்திக் தான் அந்த நபர்.
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயும், தொழிலதிபர் கார்த்திக்கும் ரொம்பவே திக் பிரண்ட்ஸ். அந்த உரிமையில்தான் ஜேசன் சஞ்சயிடம் பேசிய கார்த்திக், ”தம்பி.. உங்க அப்பா இப்போ மாநிலத்தோட முதலமைச்சர் ஆயிட்டாரு. இந்த நேரத்துல குடும்பத்தோட சப்போர்ட் அவருக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். உங்க அம்மா கிட்ட பேசி அந்த விவாகரத்து வழக்கை திரும்ப பெற வைங்க” அப்படின்னு ரொம்பவே ஆழமாக சமரசம் பேசி இருக்கிறார்.
நாம் அன்று சொன்னபடியே இப்போது ஆகஸ்ட்ஏழாம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில அந்த அதிரடி திருப்பம் நடந்திருக்கிறது. ஆகஸ்ட் ஏழாம் தேதியான நேற்று சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்ததனால் முதலமைச்சர் விஜய் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை. ஆனால் மதியம் 1:30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றத்தில் சங்கீதா ஆஜரானார். நீதிபதி சுஜாதா முன் மிக சரியாக ஐந்து நிமிடம் மட்டுமே பேசிய சங்கீதா ”இப்போதைய சூழ்நிலையை கருதி நான் கொடுத்த இந்த விவாகரத்து வழக்க திரும்ப பெறுகிறேன்” என அதிரடியாக அறிவிக்க, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

தொழிலதிபர் திருவேணி கார்த்திக் கொடுத்த ஐடியாப்படி மகன் ஜேசன் சஞ்சயை வைத்து அந்த வேண்டுகோளை ஏற்று தான் சங்கீதா இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதன் மூலமாக விஜயும், சங்கீதாவும் மீண்டும் இணைந்து வாழப் போகிறார்கள் என்கிற அந்த நல்ல செய்தி கன்பாஃர்ம் ஆகி இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்துதான் அன்றைக்கு ஆடி வெள்ளி. இன்னைக்கு நம்ம முதலமைச்சர் விஜய் பட்டுவேட்டி பட்டு சட்டையில் சும்மா மாப்பிள்ளை மாதிரி சட்டமன்றத்துக்கு வந்தாரோ? என்னவோ? என தவெக மூத்த நிர்வாகிகள் எல்லாம் செம்ம குஷியில் பேசிக்கொண்டார்கள்.
ஆனால் இதற்கு நடுவில் ஒரு கசப்பான உண்மையும் கசிந்திருக்கிறது. விஜயை சுற்றி இருக்கிற அந்த நால்வர் அணியில் ஜேபி எனச் சொல்லக்கூடிய ஜெகதீஷ் பழனிசாமியை சங்கீதாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். அவரோட தவறான வழிகாட்டலும், இந்த தலையீடும் தான் நம்ம குடும்பம் இந்த நிலைமைக்கு வர காரணம் என சங்கீதா தனக்கு நெருக்கமானவர்களிடம் ஏற்கனவே ஆதங்கப்பட்டு பேசி இருக்கிறார்.
இவ்வளவு நாள் பிரிந்து வாழ்ந்த விஜய்- சங்கீதாவோட வாழ்க்கையில் இப்போது ஒரு நல்ல முடிவு வந்திருக்கிறது. மறுபடியும் அவர்கள் விஷயத்தில் இந்த ஜெகதீஷ் பழனிசாமி நுழைந்து மறுபடியும் குட்டையை குழப்பிவிடக் கூடாது என்பதுதான் சங்கீதா மற்றும் அவரோட நலவிரும்பிகள் எதிர்பார்க்கிறார்களாம்.
