Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான ஷாஜகானை கண்டித்து திமுகவினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் தற்போது பாபநாசம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜகான், “இன்னும் 50 ஆண்டுகளில் திமுக துடைத்தெறியப்படும்” என்று பேசியதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியின் ஆதரவோடு, திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட்டு பாபநாசம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான அவர், தங்களது கட்சியையே விமர்சித்துப் பேசியதாக கூறப்படுவதால், திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

இதன் விளைவாக, பாபநாசம் மற்றும் தஞ்சாவூர் நகரின் முக்கிய வீதிகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் “பச்சோந்தி ஷாஜகானே மன்னிப்புக் கேள்!” மற்றும் “நன்றி மறந்த IUML அமைச்சர் ஷாஜகானே!” போன்ற கடுமையான வாசகங்கள் இடம்பெற்ற கண்டன போஸ்டர்கள் திமுகவினரால் ஒட்டப்பட்டுள்ளன.

இதையும் படியுங்க  ஸ்டாலின் - உதயநிதியின் கேவலமான செயல்..! இனி தப்பிக்கவே முடியாது..! தவெக ஆவேச எச்சரிக்கை..!

கூட்டணி அமைச்சருக்கு எதிராக தங்களது சொந்தக் கட்சியினரே களமிறங்கி போஸ்டர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 months ago at 2 months ago