முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த ஆட்டோமொபைலான Audi A9 Chameleon காரை வாங்கி இருக்கிறார். அல்ட்ரா லக்ஸரி என்று சொல்லப்படுகிற இந்த காரின் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
தனித்துவமான அம்சம் என்னவென்றால் அது தன்னுடைய நிறத்த மாற்றிக் கொள்ளும். நினைத்த மாதிரி இந்த காருடைய நிறத்தை மாற்ற முடியும். ஒரு பட்டனை அழுத்தினால் போதும் இந்த காருடைய கலரை மாற்றலாம். காரின் பெயிண்ட் எலக்ட்ரிக்கல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்னும் முக்கியமான விஷயம் உலகளவில் இந்த மாதிரி 11 கார்கள் மட்டுமே இருக்கிறது.
அடுத்ததாக இது ஒரு தனித்துவமான டிசைனை கொண்டு இருக்கும் சிங்கிள் பீஸ் கிரீம் கொண்ட மாடல். ரொம்பவும் யூனிக்கான தோற்றத்தை கொண்டு இருக்கிறது. பார்க்க ஒரு விண்கலம் மாதிரி இருக்கும் இந்த காருடைய நீளம் சுமார் ஐந்து மீட்டர். இந்த கார் தனித்துவமான இரண்டு கதவு அமைப்பை கொண்டிருக்கிறது. இது ஒரு அல்ட்ரா எக்ஸ்பிரஸ். உலக அளவில் ரொம்ப குறைவாகவே இந்த வகை கார் விற்பனை செய்யப்படுகிறது.

ஆடி கார் அதிகபட்சமாக 600ஹார்ஸ் பவரை உறுதி செய்யும். நிறைய கதவுகள் இருக்காது. இதில் ஏற்கனவே சொன்ன மாதிரி இரண்டு கதவுகள் தான் இருக்கும். இந்த காருடைய வின்ஷீல்டும் ரூஃபும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. 633 ஹார்ஸ் பவர் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த அல்ட்ரா லக்ஸரியான செடான் கார்களில் ஒன்றாக இருக்கும். இதில் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் கிட்டதட்ட 375 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம்.
அது மட்டும் இல்லாமல் இது பாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்டிருப்பதால் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்ய முடியும். மூன்று வினாடிகளில் ஸ்பீட 100 கிலோமீட்டர் வேகம் அதிகரிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலவகையான கார்களை அம்பானி ஃபேமிலி வைத்திருந்தாலும் இவ்வளவு அம்சங்களை கொண்ட இந்த ஆடி Audi A9 Chameleon இந்தியாவிலேயே காஸ்ட்லியான கார் என்று சொல்லப்படுகிறது.
சமூக ஊடகங்களில் இந்த கார் “ஆடி ஏ9 கேமிலியன்” (Audi A9 Chameleon) என்ற பெயரில் ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீதா அம்பானியிடம் 90 முதல் 100 கோடி ரூபாய் மதிப்பில் இருப்பதாகப் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியாகும் (Fake News). இது ஆடியால் அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த கார் அல்ல; வெறும் டிஜிட்டல் கான்செப்ட் மட்டுமே எங்கிறார்கள்.
