Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

EPS Stalin

”தவெக எம்எல்ஏ., முஸ்தபாவிடம் பேரம் பேசியது தொடர்பாக மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், ”அதிமுக மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்தவர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்கள். தேர்தல் முடிந்த சமயத்தில் பல தவெக எம்எல்ஏக்களை விலை பேச முயன்றார்கள். கரூரைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க இப்போதும் ஸ்டாலினும், உதயநிதியும் முடுக்கி விட்டுள்ளார்கள். அதனால் தான் இந்த ஆட்சி இத்தனை மாதங்கள் தான் இருக்கும் சொல்லி வருகிறார்கள்.

R. Nirmal Kumar

அவர்களின் ஒரே முயற்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக-வின் ஆதரவுடன் இபிஎஸூம், திமுகவும் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சி இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. போன முறையே பொது வேட்பாளர் போட்டு, ஒன்றாக நிற்பதுதான் திட்டமாக இருந்தது. கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதால், அது கைவிடப்பட்டது.

அடுத்து வரும் இடைத்தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதற்கும் உட்கட்சி கிளம்பினால் தனி வேட்பாளர்கள் போடலாம். அவர்கள் சேர்ந்து தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி திமுக தொடர்ந்து செய்து வருகிறது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவிடம் லட்சக்கணக்கான கோடி ஒவ்வொருவரிடம் இருக்கிறது. அதை வைத்து அவர்கள் செய்யும் ஒரே முயற்சி இதுதான்.

இதையும் படியுங்க  "வீட்டுக்கு பக்கத்துல கோட்டையா? உட்காரும் இடத்துல உறுத்துதா?" – 2040-ல் சென்னை மூழ்கும் என CM விஜய்யை ஆதாரத்தோடு விளாசிய சீமான்!

திமுக போன்ற கட்சிகளினால் தான் பிரச்னை இருந்து கொண்டே வருகிறது. 3 மாதத்தில் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்கிறார்கள். நூறு சதவீதம் நடக்காது” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 hours ago at 3 hours ago