Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Duraimurugan

நேற்றைய தினம் செப் -1 தமிழக அரசியல் களத்தின் பரபரப்பு மையமாக மாறிப்போனது ஒரு கல்யாண மண்டபம் அங்கு கழகத்தின் பொதுச்செயலாளர்… கலைஞரின் நம்பிக்கைக்குரிய தளபதி… ‘திமுகவின் மூத்த தூண்’ என்று அழைக்கப்படும் துரைமுருகனின் இல்லத்தில் நடந்த திருமணம்தான் அது.

ஆனால், மணமக்களை விட, மேடை அலங்காரத்தை விட, விருந்து சாப்பாட்டை விட… அங்கே ஒலித்த ஒரு ஒலிதான் இன்று டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அது… சமஸ்கிருத வேத மந்திர ஒலி!

யாருக்கு யார் கல்யாணம்? வேலூர் எம்.பி கதிர் ஆனந்தின் மகளும், துரைமுருகனின் பேத்தியுமான செந்தாமரைக்கும், சினிமா தயாரிப்பாளர் திட்டக்குடி கண்ணன் ரவி – தீபா தம்பதியரின் மகன் தீபக் ரவிக்கும்தான் கோலாகலத் திருமணம் நடந்தேறியிருக்கிறது.’

“மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா…’ என்று ஐயர் மந்திரம் ஓத, அக்னி வளர்த்து, தாலி கட்டி, நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்து நடந்த அச்சு அசல் பாரம்பரிய இந்து முறைத் திருமணம் இது.

இதையும் படியுங்க  தலைகீழ் ட்விஸ்ட்… தவெக-வை விழுங்கும் அதிமுக..? ஆப்பு வைத்துக் கொண்ட விஜய்..! அலறும் விஜய் ரசிகர்கள்!

மேடையை அலங்கரித்த தலைகள்!வந்திருந்தவர்கள் பட்டியலைப் பார்த்தால் சுயமரியாதை காரர்கள் முன்னாள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி என திமுகவின் முதல் குடும்பமே முன் வரிசையில்.

அத்துடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி – சௌமியா தம்பதி, பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் என எதிரும் புதிருமான அரசியல் துருவங்கள் அத்தனையும் ஒரே மேடையில் குழுமியிருந்தன. அத்தனை பேரும் அமைதியாக அமர்ந்து அந்த சமஸ்கிருத மந்திரத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்!

சீறியது முதல் அம்பு சுப.வீரபாண்டியன்!திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் புயல் வெடித்தது. வெடித்தவர் வேறு யாருமல்ல… திராவிட இயக்கத்தின் காவலர், கொள்கை முரசு சுப.வீரபாண்டியன் துரைமுருகனின் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் போட்ட எக்ஸ் பதிவு இன்று ட்ரெண்டிங்கில் கொளுந்துவிட்டு எரிகிறது

என் பெருமதிப்பிற்குரிய, என்னிடம் பேரன்பு காட்டும் அண்ணன் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இப்போதும் வலிக்கிறது என் இதயம்!” இது தனி மனிதனின் கூக்குரல் அல்ல. லட்சக்கணக்கான திராவிடத் தொண்டர்களின் நெஞ்சடைப்பின் எதிரொலி என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

இதையும் படியுங்க  யம்மாடி ஆத்தாடி… கழுத்தில் 3 கிலோ தங்கம்..! துரைமுருகன் பினாமியா..? யார் இந்த 'நடமாடும் நகைக்கடை..? #Republic Tamil

தொடர்ந்து குத்திய செந்தில்குமார்!சுப.வீயின் குரல் அடங்குவதற்குள், அடுத்த அம்பை எய்தினார் தர்மபுரி முன்னாள் திமுக எம்.பி டாக்டர் செந்தில்குமார்.” சுயமரியாதை முறையில் திருமணத்தை நடத்தக் கிடைத்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டதில் எனக்கு உடன்பாடில்லை!” என்று கூர்மையாகக் குத்தியிருக்கிறார்.

அண்ணே… துரைமுருகன் அண்ணே! நீங்கள் சாதாரண ஆள் இல்லை. கலைஞருக்குப் பிறகு, ஸ்டாலினுக்கு அடுத்து கழகத்தின் இரண்டாம் இடம். பெரியார் மண்ணில் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் நீங்கள். உங்கள் வீட்டு வாசலிலேயே சமஸ்கிருதம் ஒலிக்கலாமா? தாலி கட்டி, நல்ல நேரம் பார்த்து, அக்னி வளர்த்து நடக்கும் திருமணம்தான் சாதியையும், பெண் அடிமைத்தனத்தையும் தூக்கிப் பிடிக்கிறது என்று பெரியார் காலத்திலிருந்து மேடைதோறும் முழங்கி வருகிறோமே… அதை உங்கள் இல்லத்திலேயே மீறலாமா? கழகப் பொதுச்செயலாளருக்கே துணிச்சல் இல்லையென்றால், கடைக்கோடி தொண்டன் என்ன செய்வான்?” இதுதான் இன்று ஒவ்வொரு உடன்பிறப்பின் முகநூல், எக்ஸ் தளம் , வாட்ஸ்அப் குழுவிலும் விவாதமாகக் கொதிக்கிறது.

பின்னணியில் ‘ரெய்டு பயம்’? அரசியல் விமர்சகர்கள் இன்னொரு கோணத்தையும் கிளறுகிறார்கள். சமீபத்தில் ஒரு பொது மேடையில் துரைமுருகன், “எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது, விஜய் ஆகிவிட முடியாது” என்று பேசியிருந்தார். அதுவே ‘ரெய்டு பயத்தின் வெளிப்பாடு’ என்று அப்போதே பேசப்பட்டது .இப்போது பேத்தி திருமணத்தில் வேத மந்திரம் ஒலித்திருப்பது… இது டெல்லியைப் பகைத்துக்கொள்ள விரும்பாமல் போடும் ‘சாஃப்ட் இந்துத்துவா’ வேஷமா? மத்திய அரசின் கண் அசைவுக்கு ஏற்ப கொள்கையை வீட்டு வாசலோடு நிறுத்திவிட்டீர்களா? என்று குத்தலாகக் கேட்கிறார்கள் எதிர்தரப்பினர்.

இதையும் படியுங்க  "மகன் போட்ட ஸ்கெட்ச்… தந்தை கொடுத்த விளக்கம்! தவெக வதந்திக்கு பின்னால் நடந்த தேனி அரசியல் யுத்தம்!"

திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட மேடையில் அமர்ந்து மந்திரம் கேட்ட தலைகளுக்கும் இந்த வலி இல்லாமல் இருக்குமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. சுயமரியாதைக்காரர்களின் மனம் இன்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறது என்பதுதான் கள நிஜம். இது ஒரு திருமணச் செய்தி அல்ல… திராவிடக் கொள்கை அடகு வைக்கப்படுகிறதா என்ற ட்ரெண்டிங் கேள்வி! பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் மௌனம் காக்கிறார்கள்… ஆனால் தொண்டர்களின் இதயம் வலிக்கிறது.

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

ஊடகங்களில், 5 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC-தமிழ்" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 hours ago at 10 hours ago