கணவரை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி, மற்றும் 13 வயது மகன் சிறையில்… ஒன்றும் அறியாத மகள் தனிமையில்..
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர், சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் எஸ்.கே. நகரில் குடும்பத்துடன் தங்கி, செங்கல், சிமெண்டு , ஜல்லி கற்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார். இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், ஸ்ரீராம் (12) என்ற மகனும், சாய்ஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி அதிகாலையில் சுஜிதாஸ்ரீ, பூபதியின் தங்கை பூங்கொடியை செல்போனில் தொடர்புகொண்டு, மகன் ஸ்ரீராமுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே, ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதியில் ஒருவரிடம் மந்திரித்து கயிறு கட்டுவதற்காக வந்தோம். அப்போது சிலர் உங்கள் அண்ணனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, என்னுடைய நகையைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர் என்று பதற்றத்துடன் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அலறி துடித்த பூங்கொடி உடனே ஓமலூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காரின் முன் இருக்கையில் சாய்ந்த நிலையில், பூபதி ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக பூபதியின் தங்கை பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்
கொடூர மனைவி (பாதகத்தி) மீது சந்தேகம் பூபதியின் உடலில் இருந்த வெட்டுக் காயங்கள் அரிவாளால் வெட்டியது போன்று இல்லை மாறாக, அரிவாள் மனையால் வெட்டியது போன்று இருந்துள்ளதாகவும், காரில் வைத்து கொலை நடந்தது போன்ற எந்தவொரு தடயங்களும் இல்லை அதே நேரத்தில், பூபதி கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், சுஜிதாஸ்ரீயின் நகை பறிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சுஜிதாஸ்ரீக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

எனவே, வேறு எங்காவது கொலை செய்துவிட்டு, அவரது உடலை இங்கே கொண்டு வந்து சுஜிதாஸ்ரீ நாடகம் ஆடுகிறாரா? என்ற போலீசாரின் சந்தேகப் பார்வை சுஜிதாஸ்ரீ மீது திரும்பியது
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய சுஜிதாஸ்ரீயிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரணை நடத்தியதில், அவர் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரைக் குத்திக் கொலை செய்தது அம்பலமானது.
ஆம்பளைகளுக்காக நடந்த கொலை

சுஜிதாஸ்ரீக்கு ஏற்கனவே பல்வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பிலிருந்து வந்துள்ளார் . கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் திருமணம் ஆகாத வாலிபர்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வருவதாகவும் தற்போது அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் பெங்களூர் ஐ.டி. ஊழியரான சந்தோஷ்ராஜ் என்ற திருமணம் ஆகாத வாலிபரோடு கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் கண்டுபிடித்தனர்
கள்ளக்காதல் விவகாரம் பற்றி தெரிந்ததும், சுஜிதாஸ்ரீயை பூபதி கண்டித்துள்ளார். இது தொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்றும் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டபோது, சுஜிதாஸ்ரீ தனது கணவர் பூபதியைப் பிடித்து கீழே தள்ளி, தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், பூபதி திமிறியதால், சுஜிதாஸ்ரீ கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்து, மகனிடம் அருவாமனையை எடுத்து வரச்சொல்லி கள்ளக்காதலனோடு , பூபதி’யை பல்வேறு இடங்களில் குத்திக் கொலை செய்துள்ளனர்.

பின்னர், கொலை செய்யப்பட்ட பூபதியின் உடலை காரின் முன் சீட்டில் அமர்ந்த நிலையில் வைத்து, சந்தோஷ்ராஜ் காரை ஓட்ட, சுஜிதாஸ்ரீ தனது மகனையும், தூங்கிக் கொண்டிருந்த தனது மகளையும் பின் சீட்டில் அமர வைத்துக்கொண்டு, ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சரபங்கா ஆற்றோரமாக காரை நிறுத்தி, அணிந்திருந்த நகையைக் கழற்றி சந்தோஷ்ராஜிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, கோவிலுக்குச் செல்லும்போது நகைக்காக கொலை நடந்ததாகத் கூறி நாடகமாடியது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜையும் கைது செய்த ஓமலூர் போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அம்மாவின் சபலத்தால் அப்பா கொலையான நிலையில், அம்மா சிறைக்குச் சென்றுவிட்டார். தம்பி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், அப்பாவியான அந்தப் பெண் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி? இருக்கிறது.
