Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் தவெக- காங்கிரஸ் கூட்டணியை மையமாக வைத்து நடக்கும் சலசலப்புகள்தான் ஹாட் டாபிக். அதிலும் குறிப்பாக நம்மளை விடவே மாட்டாங்க என்று நினைத்த காங்கிரஸ் கட்சிக்கு ஸ்டாலின் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அது என்ன? தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும் காங்கிரஸின் முக்கிய முகங்களாக இருக்கக்கூடிய ப.சிதம்பரம், செல்வப் பெருந்தகை போன்ற தலைவர்கள் திமுகவுடன் இணக்கமாக இருக்க காரணம் என்ன? நாடாளுமன்ற தேர்தலலில் தவெக பிரதமர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறி வரக்கூடிய நிலையில் ராகுல் காந்தியின் கனவு பழிக்குமா? பழிக்காதா என்ற குழப்பத்தோடு தவெகவுடன் காங்கிரஸ் பயணித்து வருவதாக சொல்லப்படுகிறது.

அரசியல் களத்தில் நிரந்தர எதிரிகளோ, நண்பர்களோ கிடையாது என்பதற்கு ஏற்ப 2026 சட்ட பேரவை தேர்தல் முடிவுகள் வந்தவுடன் தவெகவுடன் கைக்கோர்த்தது இன்றைய காங்கிரஸ். விஜய் ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இரண்டு அமைச்சர் பதவிக்காக முந்தி கொண்டு போய் துண்டை போட்டது காங்கிரஸ் தரப்பு. ராகுல் காந்தி, விஜயின் பதவியற்பு விழாவுக்கு வந்து கலந்துகொண்டார்.

இதையும் படியுங்க  டாஸ்மாக்கை கைவிடும் தவெக அரசு..! விஜயின் அதிரடி முடிவு..! மது ஒழிப்பு மாஸ் வெற்றியா..?

அதுவும் முதல் ஆளாக.. ஆனால் அந்த கூட்டணி ஒப்பந்தம் நடந்து 100 நாட்கள் கூட தாண்டவில்லை. அதற்குள்ளாகவே தவெக அமைச்சர்கள் அடுத்த பிரதமர் விஜய்தான் என்று ஓப்பனாக பேச ஆரம்பிக்க, கதையே தலைகீழாக மாறிவிட்டது. என்னை கூடத்தான் அடுத்த பிரதர்னு சொல்றாங்க. அதெல்லாம் சீரியஸா எடுத்துக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் நக்கல் அடிக்க, கோபத்தின் உச்சகட்டத்திற்கே போனது தவெக முகாம்.

வரக்கூடிய 2029 நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பற்றி கவலைப்படாமல் விஜயை மட்டுமே பிரதமர் முகமாக முன்னிறுத்த தவெக காய் நகர்த்த தொடங்கியது. இதனால் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு அடியில் நெருப்பு பற்றி
கொண்டிருக்கிறது. 10 வருஷம் கைப்பிடித்து தூக்கிவிட்ட திமுக்க கூட்டணியை ஓரம் கட்டிவிட்டு வந்து மாட்டி கொண்டோமே என்று இப்பொழுது தவித்து போய் நிற்கிறது காங்கிரஸ்.

நிலைமை கைமீறி போவதை உணர்ந்த டெல்லி மேலிடம் உடனே பழைய எஜமான திமுகவை நோக்கி தன்னுடைய தூதுக்கரங்களை நீட்டி இருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய சில சீனியர் காங்கிரஸ் புள்ளிகள் மூலமாக நேரடியாக திமுக எம்பி கனிமொழியிடம் பேசி பார்த்திருக்கிறார்கள். ஆனால் கனிமொழி மூலமாக இந்த தகவலை கேட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய எந்த கட்சியையும் இனி ர்த்து கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சிக்கு திமுகவில் இனி இடமே இல்லை” என்று ஒற்றை வரியில் செக் வைத்து விட்டாராம்.

இதையும் படியுங்க  CM விஜய்-யின் தலைக்கு மேல் தொங்கும் ரெண்டு கத்திகள்.. ! தூக்கத்தை தொலைத்த தவெக..!

ஸ்டாலினின் இந்த அதிரடி பதில் டெல்லி காங்கிரஸை அதிரவிட்டாலும் கைவிடாத காங்கிரஸ் தலைமை இப்போதே பிளான் பி வேலைகளை தொடங்கி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருப்பதால் தவெக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கும் வரை காத்திருந்து பார்த்துட்டு ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் எப்படியாவது ஸ்டாலின் மனசை மாற்றி திமுக கூட்டணியில் நுழைந்து விடலாம் என கணக்கு போடுகிறார்கள். அதற்காகவே கட்சியில் இருக்கக்கூடிய திமுக ஆதரவு முகங்களான ப.சிதம்பரம் மற்றும் செல்வப் பெருந்தகை போன்று சீனியர்களிடம் ரகசிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது டெல்லி. திமுகவுடனான உறவை தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திமுக- காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கக்கூடிய பொறுப்பு உங்களுடையது என்று அவர்களுக்கு கடுமையான ஒரு அசைன்மெண்ட்ட கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

விஜயை நம்பி போயி இப்போ சொந்த கட்சியிலும் இடமில்லாமல், பழைய கூட்டணியிலும் கதவடைக்கப்பட்டு நடுரோட்டில் நிற்கக்கூடிய காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைமை தமிழ்நாட்டில் செம்ம வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்க  சி.விஜயபாஸ்கருக்கு பேரிடியை இறக்கிய செய்தி..! உயர் நீதிமன்றம் அதிரடி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 hours ago at 2 hours ago