“டிஜிட்டல் அரெஸ்ட்” என்ற பெயரில் கோவையில் முதியவர் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
அவரை தொடர்புகொண்ட மர்ம நபர்கள் தங்களை சிபிஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி, வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இதற்காக வங்கியில் உள்ள பணத்தை அனுப்புமாறு மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் மிரட்டலுக்கு பணிந்த அந்த முதியவர் சுமார் 20 லட்சம் ரூபாயை அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
