Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Thirumavalavan

யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அந்த அறிவிப்பு வந்திருக்கிறது. மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இரண்டும் தனி தொகுதிகள் வேறு.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாவலன் கூறுகையில், ”இது தொடர்பாக நாங்கள் எந்த பேச்சு வார்த்தையும் தவெகவோடு நடத்தவில்லை. ஏற்கனவே எங்கள் தலைவரை போட்டியிடுமாறு தவெக தரப்பில்
கேட்டுக்கொண்டதற்கு எங்கள் தலைவர் வேண்டாம் என்று தான் மறுத்துவிட்டார். அதனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து இதுவரை எந்த வேறு எதுவும் முடிவுகள் எடுக்கப்படவில்லை. ஒருவேளை ஒன்பதாம் தேதி ஒன்றாம் தேதி நடைபெறுகிற கூட்டத்தில் ஏதாவது கருத்து சொல்வார்களா என்பது தெரியாது.

ஏற்கனவே இந்த தேர்தல் வழக்கு வேறு நடந்து கொண்டு இருக்கிறது. ஏழு தொகுதிகளுக்கும் தேர்தல் இது என
அறிவித்தால் என்னவோ, ஒரு தொகுதிக்கு ரெண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிற மாதிரி ஆகிப்போய்விடும். அதனால்தான் இப்போது மற்ற ஐந்து தொகுதிகளை விட்டுட்டு இந்த சிக்கல்களில் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.

இதையும் படியுங்க  ”100 கோடி பள்ளி மோசடி: திமுக முன்னாள் MLA-வுக்கு ‘லுக்-அவுட்’ செக்.. அடுத்து சிக்கப்போகும் அதிகாரிகள் யார்?

தொகுதிக்கு நலத்திட்டங்களை கொண்டு போவதற்கு அந்த தொகுதி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. அந்த அடிப்படையில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் பதவியை ராஜினா செய்தடில் நமக்கு உடன்பாடு இல்லை, அதை எங்கள் தலைவர் ஏற்கனவே சொல்லிவிட்டார். மக்கள் யாருக்காக வாக்களித்தார்களோ அவர்களுக்கு அந்த பதவியை அவங்க விட்டுக் கொடுக்காமல் அந்த பதவிவியில் நீடித்துதான் அந்த தொகுதிக்கான நலத்திட்டங்களை செய்யணும். அதான் எங்களுடைய கருத்து” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 days ago at 4 days ago