செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்ம் தெரிவித்துள்ளார்.
2014-2018 காலகட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மற்றும் பிற பணிகளுக்கான டெண்டர்களைத் தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய சகாக்களுக்கு வழங்கி, சுமார் ₹98.25 கோடி முறைகேடு செய்ததாக ‘அறப்போர் இயக்கம்’ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தியது.தற்போதைய நீதிமன்ற நிலை சபாநாயகர் அனுமதி: எஸ். பி. வேலுமணி மீது வழக்கு தொடர தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு பிப்ரவரி 2024-ல் அனுமதி அளித்துவிட்டார்.
இவ்வழக்கின் விசாரணை தாமதமாவது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேசன் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு அனுமதி அளிப்பதில் 19 மாதங்களுக்கும் மேலாக தாமதம் செய்வதைச் சுட்டிக்காட்டி, “செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது மிகவும் கடினமாக உள்ளது” எனக் கூறி, மத்திய அரசு அதிகாரிகளைத் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்த்து விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிபதி. ”இந்தியர்கள் ஊழலை எதிர்ப்பதில்லை. இதற்கு பின்னர் இந்த வழக்கில் என்ன நடக்கும் என கடவுளுக்குதான் தெரியும். வழக்கு தொடர அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழல் இருக்கிறது. செல்வாக்கு மிகுந்தவர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பது சிரமம் இருக்கிறது.
வழக்கு தொடர அனுமதி வழங்க கூறி தமிழக அரசு அனுப்பிய விளக்க கடிதம் மீது பரிசீலனை நடைபெற்று வருவதாக மத்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. இந்தியர்கள் ஊழலை எதிர்ப்பதில்லை என்பது இது போன்ற வழக்கில் இருந்தே முடிவுக்கு வர வேண்டி உள்ளது. செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது” எனவும் நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார்.
