Anbil Mahesh

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவகாரத்தில், ₹100 கோடிக்கும் மேலான லஞ்சப் புகார், மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசாரிடம் இருக்கும் ஆதாரங்களின் வீரியத்தைப் பார்க்கும்போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் அன்பில் மகேஷுக்கு கடுமையான தண்டனை கிடைப்பது உறுதி என அடித்துக் கூறுகின்றனர்.

உதயநிதி கொடுத்த ‘தலைவர்’ பதவி
திமுகவில் மிகக் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றவர் அன்பில் மகேஷ். அவரது குடும்பத்திற்கும் திமுக தலைமைக்கும் தலைமுறைகளைக் கடந்த நட்பு இருந்தாலும், அவரது இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் இருந்தது உதயநிதி ஸ்டாலின் தான். ஆரம்பத்தில் உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக இருந்து, அவரது நிழலாக வலம் வந்தவர் மகேஷ்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கட்சியின் ஒரு குறிப்பிட்ட முக்கிய சர்க்கிளில் அன்பில் மகேஷை ‘தலைவர்’ என்றுதான் அழைத்து வந்தனர். மகேஷின் சில செயல்பாடுகள், துறை ரீதியான புகார்கள் பிடிக்காமல் போனதால், ஒருகட்டத்தில் உதயநிதி அவரைத் தள்ளி வைக்கத் தொடங்கினார். தேர்தல் சமயத்திலும், தற்போதும் இருவருக்கும் இடையே பேச்சுகூட இல்லாத நிலைமைதான் நீடித்து வந்தது.

இதையும் படியுங்க  ''கரூர்லயே கதைய முடிச்சிருக்கணும்..!'' cm விஜய்க்கு பகீர் மிரட்டல் - டீட்டா சரவணனை அமுக்கிய போலீஸார்..!

சிறை சந்திப்பின் பின்னணி
திமுகவினர் மத்தியில் பெரும் கேள்வியாக இருந்தது, முகத்தைத் திருப்பிக் கொண்ட உதயநிதி ஏன் புழல் சிறைக்குச் சென்று அன்பில் மகேஷை இரண்டு முறை சந்தித்தார் என்பதுதான். இந்தச் சந்திப்பு உதயநிதியாக விருப்பப்பட்டுச் சென்றது அல்ல. திமுக தலைமை கொடுத்த கடுமையான பிரஷர் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் கைதானதும் கட்சி அவரை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டது என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் எழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உதயநிதியைச் சிறைக்குச் செல்லுமாறு தலைமை உத்தரவிட்டது.

‘சிசிபி’ போட்ட இரும்புக்கோட்டை
பொதுவாக திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போடும் வழக்குகளின் விவரங்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் திமுக தலைமைக்குச் சென்றுவிடும். ஆனால், அன்பில் மகேஷ் வழக்கில் சீக்ரெட் பிளான் வேலை செய்துள்ளது. இந்த வழக்கைக் கையாள்வது சென்னை மாநகர போலீசின் மத்திய குற்றப்பிரிவு என்பதால், இங்கிருந்து எந்த ஒரு சிறு தகவலும் வெளியில் கசியாத அளவுக்குத் துல்லியமான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க  எடப்பாடிக்கு கடைசி வாய்ப்பு..! தவெக-வுக்கு வரும் 28 எம்.எல்.ஏ-க்கள்..! அதிமுகவை உடைக்கிறாரா வேலுமணி..? 

லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்குகளை விட சிசிபி-யின் வழக்கு மிக ஸ்ட்ராங்காக இருக்கிறது. ஆன்லைன் மூலமாக லஞ்சப் பணம் கைமாறியதற்கான டிஜிட்டல் ஆதாரங்களைச் சென்னை போலீசார் அக்குவேறு ஆணிவேறாகத் திரட்டியுள்ளனர்.

கருணாநிதி பாணி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சியினர் மீதான ஊழல் வழக்குகள் எந்த அளவுக்குச் சட்ட ரீதியாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பக்காவாகக் கையாளப்படுமோ, அதே பாணியைத் தான் தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசும் கையில் எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் தராத வகையில், டிஜிட்டல் ஆதாரங்களை முன்வைத்து திமுகவின்நன அன்பில் மகேஸை முடக்கப் பக்கா ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *