M.K. Stalin

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் தனது கட்சி நிர்வாகிகளைக் கவனிப்பதில் திமுக தலைமை எப்போதும் தாராளம் காட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிக்கு திமுக தலைமை நிர்வாகிகளைக் கண்டு கொள்ளாமல் கைவிரித்துவிட்டது. ஆட்சியை தவெக கைப்பற்றியதால் ஏற்கனவே நொந்துபோயிருக்கும் திமுக நிர்வாகிகளுக்கு, தலைமையின் இந்த முடிவு பேரிடியாக இறங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சித் தலைமையை ஏற்றது முதல், திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தீபாவளிப் பரிசு வழங்குவது ஒரு வழக்கமாகவே இருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் சரி, கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும் சரி, ஒவ்வொரு தீபாவளிக்கும் மாவட்டங்களுக்கு எனச் சில கோடிகளைத் தலைமை ஒதுக்கும்.

மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் முதல் அடிமட்ட வார்டு செயலாளர்கள் வரை அனைவருக்கும் கணிசமான பணமும் இனிப்புகளும் போய்ச் சேரும்.

ஏமாற்றத்தில் திமுகவினர்
தேர்தல் தோல்வியால் ஆட்சி பறிபோய், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த உடன்பிறப்புகள் இந்தத் தீபாவளியையாவது தலைமை குஷியாகக் கொண்டாட வைக்கும் என நம்பியிருந்தனர்.

இதையும் படியுங்க  "ஸ்டாலின் பெயரை அழுத்திச் சொன்ன மோடி... அமைதியாக 'ஸ்கோர்' செய்த விஜய்! இணையத்தைக் கலக்கும் சென்னை மாஸ் வீடியோ!"

யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற பட்டியல் தயாரித்தும், இந்த முறை அறிவாலயத்தில் இருந்து எந்தப் பணமும் வரவில்லை” என நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

தலைமை கைவிட்டாலும், தங்களது பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் சோர்ந்து போய்விடக் கூடாது என்பதற்காக மாவட்ட அளவில் மாற்று ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. “தலைமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கட்சிப் பணிகளைத் தொடர வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தங்களது சொந்தப் பணத்தில் இருந்து தங்களால் முடிந்த பரிசுத் தொகையை நிர்வாகிகளுக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர்” எனக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *